விஜய் சங்கர் எந்த இடத்திலும் ஆடுவார்: தேர்வுக்கான காரணம் கூறிய ரவி சாஸ்திரி 1
BRISBANE, AUSTRALIA - NOVEMBER 21: Ravi Shastri, Head Coach of India, looks on during game one of the the International Twenty20 series between Australia and India at The Gabba on November 21, 2018 in Brisbane, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

விஜய் சங்கர் எந்த இடத்திலும் ஆடுவார் அதனால் தான் அவரை தேர்வு செய்தோம் என  காரணம் கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.

16 வீரர்கள் கொண்ட அணியை அனுமதிக்குமாறு ஐசிசியைக் கேட்டோம், ஆனால் 15 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி, அணியில் தேர்வாகாதவர்கள் மனம் நோக வேண்டாம் அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

திங்களன்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட வலுவான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது, இதில் ராயுடுவுக்கு இடம் இல்லை இது குறித்த அபிப்ராயங்களில் வேறுபாடுகள் இருந்தன.

இந்நிலையில் ரவிசாஸ்திரி  பேட்டியில் கூறியிருப்பதாவது:

விஜய் சங்கர் எந்த இடத்திலும் ஆடுவார்: தேர்வுக்கான காரணம் கூறிய ரவி சாஸ்திரி 2

நான் அணித்தேர்வில் தலையிடுவதில்லை. அப்படி ஏதாவது ஆலோசனை இருந்தால் கேப்டன் மூலம் தெரிவிப்பேன். 15 வீரர்களைத்தான் தேர்வு செய்ய முடியும் எனும்போது ஓரிரு வீரர்கள் தவிர்க்க முடியாமல் விடுபட்டுப் போவார்கள். இது துரதிர்ஷ்டம்தான். நான் 16 வீரர்கள் வேண்டும் என்றேன், ஆனால் ஐசிசி 15 வீரர்கள்தான் என்று முடிவு எடுத்துள்ளது.

ஆகவே தேர்வாகதவர்கள் மனம் நோக வேண்டாம், இது வேடிக்கையான விளையாட்டு, வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் இவர்களுக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். ஏனெனில் இது நீண்ட தொடர்.

விஜய் சங்கரை 4ம் நிலையில் எடுக்கக் காரணம், முதல் 3 வீரர்களில் எந்த ஒரு நெகிழ்வும் காட்ட முடியாது, ஆனால் அதன் பிறகு மாற்றிப்பார்க்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

 

இந்திய அணி விராட் கோலியை நம்பியே உள்ளது என்ற விமர்சனம் குறித்து சாஸ்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, “கடந்த 5 ஆண்டுகளைப் பார்த்தால் இந்திய அணியின் செயல்பாடு எந்த ஒரு வடிவத்திலும் டாப் 2-3 என்று உள்ளது, டெஸ்ட்டில் முதலிடம். டி20யில் கூட டாப் 3யில் உள்ளது இந்திய அணி இப்படியிருக்கும் போது ஒரு வீரரை மட்டும் (கோலி) நம்பியிருப்பதாகக் கூற முடியாது.

விஜய் சங்கர் எந்த இடத்திலும் ஆடுவார்: தேர்வுக்கான காரணம் கூறிய ரவி சாஸ்திரி 3

இப்படி சீரான முறையில் வெற்றிகள் பெறும்போது சீராக விளையாடக்கூடிய மற்ற வீரர்களும் உள்ளனர் என்றே பொருள். அணிக்குத்தான் ஒட்டு மொத்த பெருமையும்.

இங்கிலாந்து கடந்த 2 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் சீராக உள்ளது. அவர்களிடம் பன்முகத்தன்மை கொண்ட வீரர்கள் அதிகம் உள்ளனர். பவுலிங், பேட்டிங் இரண்டிலும் அவர்கள் அணியில் ஆழம் உள்ளது. சொந்த நாட்டில் வேறு ஆடுகின்றனர் ஆகவே அவர்கள் சாதக அணியாக உள்ளனர்.

ஆனால் அன்றைய தினத்தில் எந்த அணியையும் எந்த அணியும் வீழ்த்தும். உலகக்கோப்பை போன்ற தொடர்களில் நம் ஆட்டம் எப்போதும் உயர்ந்த நிலையில் இருப்பது அவசியம்” என்றார் சாஸ்திரி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *