அணியில் இனி இவர்களுக்கெல்லாம் இடமில்லை!! பயிற்சியாளர் ஆனவுடன் ரவி சாஸ்திரி எடுத்த அதிரடி முடிவு!! 1

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்டார். இதையொட்டி அவர் கிரிக்கெட் வாரியத்தின் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

என்னை பயிற்சியாளராக தேர்வு செய்த கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டிக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியின் கட்டமைப்பில் நானும் அங்கம் வகிப்பது பெருமையும், கவுரவமும் அளிக்கிறது. நமது அணி தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அணியின் செயல்பாட்டை பார்த்தால், மிக அற்புதமாக இருப்பது தெரியும். அதே போல் தொடர்ந்து எழுச்சி பெற வேண்டும்.

அணியில் இனி இவர்களுக்கெல்லாம் இடமில்லை!! பயிற்சியாளர் ஆனவுடன் ரவி சாஸ்திரி எடுத்த அதிரடி முடிவு!! 2

அடுத்த 2 ஆண்டுக்குள் அணியில் சுமுகமான மாற்றங்கள் நடப்பதை நீங்கள் பார்க்கலாம். ஏனெனில் நிறைய இளம் வீரர்கள் வருவார்கள். குறிப்பாக டெஸ்ட் போட்டிக்கு அவர்களை தயார்படுத்த வேண்டும். பந்து வீச்சு குழுவுக்கு இன்னும் 3 அல்லது 4 வேகப்பந்து வீச்சாளர்களை அடையாளம் காண்பது அவசியமாகும். இது சவாலான பணியாகும். எனது 2 ஆண்டு கால ஒப்பந்தம் முடிவடையும் போது அணியை மகிழ்ச்சியான, நல்ல நிலையில் விட்டு செல்வேன். இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

 

ரவி சாஸ்திரி கூறுவதை பார்த்தால் இனிய அணியில் 30 வயதிற்கு மேற்பட்ட வீரர்கள் இடம் பிடிப்பது கடினம் என்றே தெரிகிறது. குறிப்பாக தற்போது 30 வயதை தாண்டிய கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் கண்டிப்பாக மீண்டும் அணியில் இடம் பெறுவது கடினம். அதனை தாண்டி புதிதாக டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள ரோகித் சர்மாவிற்கு 30 வயதிற்கு மேல் ஆகிறது. அணியில் இனி இவர்களுக்கெல்லாம் இடமில்லை!! பயிற்சியாளர் ஆனவுடன் ரவி சாஸ்திரி எடுத்த அதிரடி முடிவு!! 3அவருக்கு பதிலாக ஒரு திறமை வாய்ந்த இளம் வீரர் இறக்கினால் இன்னும் சில ஆண்டுகளில் அவர் தயாராகி விடுவார் என்பதே ரவி சாஸ்திரியின் எண்ணம். இதன் காரணமாக ரோஹித் சர்மாவும் கழட்டி விட அதிக வாய்ப்புகள் உள்ளது. டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித்சர்மா கண்டிப்பாக கழற்றி விடப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.

பந்துவீச்சாளர்களை பொருத்தவரை வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஸ்வர் குமார் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறார். அவருக்கும் 30 வயது ஆகிறது இதன் காரணமாக அடுத்த அணியை மனதில் கொண்டு தயார் படுத்தினால் அவருக்கும் இடம் கிடைப்பது கடினம் தான்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *