உலககோப்பை தொடரில் அசத்திய ஜடேஜாவிற்கு விருது!! மத்திய அரசு அறிவிப்பு!! 1

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உள்பட 19 விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஜொலித்த தீபா மாலிக் (48) ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியாவும் கேல் ரத்னா விருது பெறவுள்ளார்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது.உலககோப்பை தொடரில் அசத்திய ஜடேஜாவிற்கு விருது!! மத்திய அரசு அறிவிப்பு!! 2
இந்த விருதுக்காக திறமையும், தகுதியும் கொண்டவர்களைத் தேர்வு செய்யும் பணி கடந்த 2 நாள்களாக தில்லியில் நடைபெற்று வந்தது.
12 உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழு, விளையாட்டு வீரர்களின் பெயர்களை விருதுக்காக பரிந்துரைத்தது.
துரோணாச்சார்யா விருதுக்கான தேர்வு பட்டியலில் தனது பயிற்சியாளர் சோதேலால் யாதவ் பெயரும் இருப்பதால், சர்ச்சையைத் தவிர்ப்பதற்காக தேர்வுக் குழுவிலிருந்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
தேர்வுக் குழுவில் அங்கம் வகித்த அவர், பஜ்ரங் புனியாவின் பெயரை கேல் ரத்னாவுக்காக பரிந்துரைத்தார். சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் தீபா மாலிக் ஆவார்.
இவர், குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2012-ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதும், 2017-இல் பத்ம ஸ்ரீ விருதும் இவர் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டியிலும் ஆசிய அளவில் புதிய சாதனை படைத்தார் தீபா மாலிக். கேல் ரத்னா விருது பெறுவோருக்கு பதக்கம், சான்றிதழ், ரூ.7.50 லட்சம் ஆகியவை வழங்கப்படும்.Cricket, India Womens Cricket Team, India, Twitter, Virender Sehwag
அர்ஜுனா விருதுக்கு, கிரிக்கெட் வீராங்கனை பூணம் யாதவ், தடகளத்தில் சாதனை படைத்த தேஜிந்தர் பால் சிங் தூர், முகமது அனஸ், ஸ்வப்னா பர்மன், கால்பந்து வீரர் குர்பிரீத் சிங் சாந்து, ஹாக்கி வீரர் சிங்லென்சனா சிங் கங்குஜம், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அஞ்சும் முட்கில் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
துரோணாச்சார்யா விருதுக்கு முன்னாள் பாட்மிண்டன் வீரர் விமல் குமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீரின் பயிற்சியாளரான சஞ்சய் பரத்வாஜ் உள்ளிட்டோரின் பெயர்களும், தயான் சந்த் விருதுக்கு மனோஜ் குமார் (மல்யுத்தம்), அரூப் பாசக் (டேபிள் டென்னிஸ்) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஓய்வுக்கு பிறகு விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பவர்களுக்கு தயான் சந்த் விருது வழங்கி மத்திய அரசு கௌரவிக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *