இன்னும் சில காலம் இப்படியயே இருந்தால் இந்திய அணியில் இவர் இடம் பிடிப்பது கடினம் தான்! 1

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் தொடரில், நேற்று நடந்தப் போட்டியில் ஐதராபாத் அணி கேப்டன் அம்பத்தி ராயுடு டக் அவுட் ஆகி ஏமாற்றினார். இன்னும் சில போட்டிகளில் இவர் இவ்வாறு ஆடினால் இந்திய அணிக்குள் மீண்டும் வருவது மிகக் கடினம் என்றே தெரிகிறது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் போட்டி தொடர் இப்போது நடந்து வருகிறது. இந்தத் தொடரில், பெங்களூரு அருகில் உள்ள அலூரில் நேற்று நடந்த போட்டியில், ராபின் உத்தப்பா தலைமையிலான கேரள அணியும் அம்பத்தி ராயுடு தலைமையிலான ஐதராபாத் அணியும் மோதின.

இன்னும் சில காலம் இப்படியயே இருந்தால் இந்திய அணியில் இவர் இடம் பிடிப்பது கடினம் தான்! 2
WELLINGTON, NEW ZEALAND – FEBRUARY 03: Ambati Rayudu of India bats during game five in the One Day International series between New Zealand and India at Westpac Stadium on February 03, 2019 in Wellington, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

 

உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் சேர்த்துக்கொள்ளப்படாததால், கிரிக்கெட்டில் விலகுவதாக அறிவித்த அம்பத்தி ராயுடு, தனது முடிவை வாபஸ் பெற்றுக்கொண்டு மீண்டும் ஆட இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து அவர் ஐதராபாத் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் ஐதராபாத் அணிக்கு மீண்டும் திரும்பியதை அடுத்து நடக்கும் போட்டி என்பதால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், இந்த போட்டியில் அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றினார் ராயுடு.

 

முதலில் ஆடிய கேரள அணி, ஐம்பது ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி 44.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.

இன்னும் சில காலம் இப்படியயே இருந்தால் இந்திய அணியில் இவர் இடம் பிடிப்பது கடினம் தான்! 3
WELLINGTON, NEW ZEALAND – FEBRUARY 03: Ambati Rayudu of India bats during game five in the One Day International series between New Zealand and India at Westpac Stadium on February 03, 2019 in Wellington, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் கேரள அணி வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியில் டன்மே அகர்வால் அதிகபட்சமாக 69 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கேரள தரப்பில் ஆசிப் 4 விக்கெட்டுகளையும் பசில் தம்பி, சந்தீப் வாரியர், சந்திரன் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *