ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி! அனைத்தையும் டெலிட் செய்த RCB! 1

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் அணிகளில் முக்கியமான ஒரு அணி ஆர்.சி.பி. எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி தலைமையில் இந்த அணி விளையாடி வருகிறது. கடும் முயற்சி செய்தாலும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாத அணியாக இருக்கிறது இந்த அணி. இதனால் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதும் கூட வாடிக்கையாக இருக்கிறது.

image

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அனைத்து சமூக வலைத்தள கணக்குகளும் திடீர் மாற்றத்தை சந்தித்துள்ளன. குறிப்பாக அந்த அணியின் பெயரில் இருந்த பெங்களூர் நீக்கப்பட்டு ராயல் சேலஞ்சர்ஸ் என மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தள கணக்குகளிலும் இந்த மாற்றம் வந்துள்ளது.

image

பெயரை மட்டும்தான் மாற்றினார்கள் என்று பார்த்தால் அனைத்து கணக்குகளின் புரொஃபைல் பிக்சர், கவர் பிக்சர் ஆகியவையும் நீக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன ? என்று அந்த அணியின் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அணி நிர்வாகம், பெயரை மாற்றுவதோடு அணியின் லோகோவையும் மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி! அனைத்தையும் டெலிட் செய்த RCB! 2
After AB de Villiers and Yuzvendra Chahal, captain Virat Kohli too has expressed ‘surprise’ at the IPL franchise Royal Challengers Bangalore deleting their photos across social media platforms.
ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, “ஆல் ஸ்டார்ஸ் ஐபிஎல்” போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு, மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகியவை ஒரு அணியாகவும், கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் , டெல்லி ஒரு அணியாகவும் செயல்படும். இதில் முதல் அணியில் தோனி, கோலி, ரோகித், பும்ரா உள்ளிட்ட 11 வீரர்கள் இணைந்து விளையாட உள்ளனர். இந்த அணிக்கு தோனி கேப்டனாக செயல்படுவார் என கூறப்படுகிறது. இதே போல இரண்டாவது அணியில் வில்லியம்சன், கார்த்திக், ராகுல் உள்ளிட்ட 11 பேர் இணைந்து விளையாட உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *