ஏப்ரல் 13ஆம் தேதி பெங்களூர் அணியில் இணைகிறார் கூல்டர்னைல்! 1

பெங்களூர் அணி தொடர்ந்து சொதப்பி வரும் வேளையில் அதன் நட்சத்திர வீரர் நேதன் கூல்டர்னைல் ஏப்ரல் 13ம் தேதி வந்து பெங்களூர் அணியில் இணைவார் என்று தெரிகிறது.

நடப்பு ஐபிஎல் 2019 சீசனில் தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்த பெங்களூரு அணி வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை சந்திக்கிறது. அணியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி தொடர்ந்து தான் இதுவரை ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியே பெற்றுள்ளது. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அந்த அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. கடைசியாக ஆடிய ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்றது.

ஏப்ரல் 13ஆம் தேதி பெங்களூர் அணியில் இணைகிறார் கூல்டர்னைல்! 2
தற்போது 2 வெற்றிகள், 1 தோல்வியுடன் உள்ள கொல்கத்தா அணியுடன் மோதுகிறது. இறுதியாக கடந்த 2016-இல் கொல்கத்தாவை வென்றிருந்தது பெங்களூரு. அதன்பின்னர் சந்தித்த 3 ஆட்டங்களிலும் தோல்வியே பரிசாக பெற்றது.
கவலை தரும் பேட்டிங்: பெங்களூரு தரப்பில் கேப்டன் கோலியின் பேட்டிங் கவலை தருவதாக உள்ளது. நான்கு ஆட்டங்களில் அவரது சராசரி 20-க்கு கீழே உள்ளது. டிவில்லியர்ஸ், பார்த்திவ் பட்டேல் ஆகியோரே பேட்டிங்கில் சிறப்பாக ஆடி வருகின்றனர். சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்து 8000 டி 20 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க கோலிக்கு இன்னும் 17 ரன்கள் தேவைப்படுகிறது. பந்துவீச்சில் யுஜவேந்திர சஹலைத் தவிர வேறு எவரும் சோபிக்கவில்லை. இதனால் அணியில் மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிகிறது.

கொல்கத்தா: அதே வேளையில் கொல்கத்தா அணியின் பேட்டிங் நிதிஷ் ராணா, கிறிஸ் லீன், ரஸ்ஸல், உத்தப்பா, ஷுப்மன் கில் ஆகியோரால் அபாரமாக உள்ளது. எதிர்கால இந்திய நட்சத்திரமாக கருதப்படும் ஷுப்மன் கில்லின் ஆட்டமும் கவனிக்கப்படும்.  முதல் வெற்றியை பெறுமா பெங்களூரு என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.Nathan Coulter-Nile,Nathan Coulter-Nile Rested, Nathan Coulter-Nile IPL 2017, Nathan Coulter-Nile KKR, IPL 2017, Cricket

தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்து மோசமான நிலைக்கு சென்றுவிட்டோம். ஆனால், அடுத்து வரும் போட்டிகளில் நாங்கள் எங்களைச் சுற்றி இருக்கும் காரணிகளை மாற்றி மீண்டெழுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

இந்த போட்டியில் நல்ல தொடக்கத்தை அளிக்கவும் தவறியதுதான் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளிவிட்டது. ஆனால், மும்பையில் நடந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக ஆடினோம், ஆனால்,இங்கு விளையாடிய ஆட்டத்தைப் பார்க்கையில், இன்னும் நாங்கள் முன்னேற்றம் காணவேண்டியது அவசியம், நம்பிக்கை அளவிலும் வளர்ச்சி காண வேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *