டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது! 1

பெங்களூர் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து பஞ்சாப்புடன் முதல் வெற்றியை பெறுமா? என்று அந்த அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்குகிறார்கள்.

ஐ.பி.எல். போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரவு 8 மணிக்கு மொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்-விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது! 2

அணிகள்:
கிங்ஸ் லெவன் பஞ்சாப்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் , லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், மாயன்க் அகர்வால், சர்பராஜ் கான், நிக்கோலஸ் பூரன், மன்டிப் சிங், சாம் குரான், ரவிச்சந்திரன் அஸ்வின் , ஆண்ட்ரூ டை, முகமது ஷமி, முருகன் அஸ்வின்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  விராட் கோஹ்லி  ஏபி டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், மோயீன் அலி, அக்ஷ்திப் நாத், பவன் நேகி, உமேஷ் யாதவ், யூஜெண்டேரா சஹால், நவடிப் சைனி, முகமது சிராஜ்

பஞ்சாப் அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி ராஜஸ்தான், மும்பை, டெல்லி, ஐதராபாத்தை வென்றது. கொல்கத்தா, சென்னை, மும்பையிடம் தோற்று இருந்தது.

சொந்த மண்ணில் அதிரடியாக விளையாடுவதால் அந்த அணி அதை நீட்டித்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணியில் லோகேஷ் ராகுல், கெய்ல், அகர்வால், மில்லர், சாம் குர்ரான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது! 3

பெங்களூர் அணி தான் மோதிய 6 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை. சென்னை (7 விக்கெட்), மும்பை (6 ரன்), ஐதராபாத் (118 ரன்), ராஜஸ்தான் (7 விக்கெட்), கொல்கத்தா (5 விக்கெட்), டெல்லி (4 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.

பெங்களூர் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்றைய ஆட்டத்திலாவது முதல் வெற்றியை பெறுமா? என்று அந்த அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்குகிறார்கள்.

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் வருகை அந்த அணிக்கு பலம் சேர்க்கலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *