வங்கதேசத்தை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் இன்னிங்ஸ் வெற்றி 1
மேற்கு இந்திய தீவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேசம் அணி இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடு வருகிறது.
இந்நிலையில், இவ்விரு அணிக்களுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவா நகரில் நேற்று முன் தினம்  தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையெடுத்து  முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வங்களாதேச வீரர்களால் மேற்கு இந்திய தீவுகளின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 43 ரன்னுக்கு  சுருண்டது.

வங்கதேசத்தை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் இன்னிங்ஸ் வெற்றி 2
Kemar Roach (L) of West Indies celebrates the dismissal of Shakib Al Hasan of Bangladesh during day 1 of the 1st Test between West Indies and Bangladesh at Sir Vivian Richards Cricket Ground, North Sound, Antigua, on July 4, 2018. (Photo by Randy Brooks / AFP) (Photo credit should read RANDY BROOKS/AFP/Getty Images)

வங்களாதேசத்தில் அதிக பட்சமாக லித்தான் தாஸ் 25 ரன்கள் அடித்தார். மேற்கு இந்திய தீவுகள் சார்பில் கேமார் ரோச் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து ஆடிய மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில்  அபாரமாக விளையாடி 406 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் க்ரைக் பிராத்வெயிட் 121 ரன்களை விளாசினார்.  வங்களாதேச அணி தரப்பில் அபு ஜாயத் மற்றும் மேஹதி ஹசான் ஆகியோர் தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.

இதையடுத்து, 363 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆட தொடங்கியது வங்களாதேசம் அணி.வங்கதேசத்தை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் இன்னிங்ஸ் வெற்றி 3

முதல் இன்னிங்ஸில் அடி வாங்கியது போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் மேற்கு இந்திய தீவு பந்து வீச்சாளர்களிடம் தர்ம அடி வாங்கியது. அடுத்தடுத்து வரிசையாகயாக விக்கெட்களை இழந்து தடுமாறி வந்த நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நுருல் ஹசான் மட்டும் 64 ரன் அடித்தார். இறுதியில் வங்களாதேச அணி 144 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது.

இதன் மூலம் மேற்கு இந்திய தீவிகள் அணி 219 ரன் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அந்த அணியின் பந்து வீச்சாளர் கேமார் ரோச் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இந்நிலையில், இரு அணிகளுக்கான இரண்டாவது மற்றும் கடைசி  டெஸ்ட்  ஜூலை 12ம் தேதி ஜமைக்கா நகரில் நடைபெற உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *