மும்பை வீரர் அஜின்கியா ரஹானே காயம்சையத் முஸ்தாக் அலி தொடரின் மீதமுள்ள போட்டிகளில் ஆடுவது சந்தேகம்
மும்பை வீரர் அஜின்கியா ரஹானே தற்போது செய்து சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் ஆடிவருகிறார். மும்பை அணிக்கு கேப்டனாக இருக்கும் அவர் தற்போது காயமடைந்துள்ளார். இதன் காரணமாக அவர் மீதமுள்ள டி20 தொடரில் ஆட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இவர் ஆடவில்லை என்றால் அந்த அணியின் அதிரடி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் இவ்வாறு காயமடைந்ததால் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடுவதும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஐபிஎல் நிர்வாகத்தில் நாங்களை தலையிட மாட்டோம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் டி20 லீக் போட்டிகளை சீரமைத்து ஒழுங்குபடுத்தவும், வீரர்களின் பங்கேற்பை கட்டுப்படுத்த வேண்டும் என ஐசிசி கூறியிருந்தது. இதற்காக குழு அமைக்கப்பட்டு வழிமுறைகள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஐபிஎல் போட்டிகள் முழுமையாக உள்நாட்டு லீக் போட்டியாகும். இதில் ஐசிசி தலையிடக்கூடாது என ஆட்சேபித்திருந்தது.
இதுதொடர்பாக ஐசிசி முதன்மை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்ஸன் வெளியிட்ட அறிக்கை:
ஐபிஎல் போட்டிகள் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தப்பட்டுள்ளன. இதை அடிப்படையாகக் கொண்டு டி20 போட்டிகளுக்கு வழிமுறைகள் உருவாக்கப்படும். டி20 போட்டிகளை சீரமைக்க அமைக்கப்பட்ட குழு, ஐபிஎல் செயல்பாடுகளை அறிந்து அதன் விதிகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்கும். தேசிய அணியைக் காட்டிலும் லீக் போட்டிகளில் ஆடுவதையே வீரர்கள் விரும்புகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும், தலா 2 அல்லது 3 லீக் மட்டுமே ஆட விதிகள் வகுக்கப்படும் என்றார்.
ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்களின் ஓய்வு குறித்து இந்திய அணியின் தேர்வுக் குழு முடிவு செய்யும் என பிசிசிஐயின் பொறுப்பு செயலாளர் அமிதாப் செளதாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாக்களில் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுவது ஐபிஎல். அந்தவகையில் இந்தாண்டு ஐபிஎல் திருவிழா வரும் 23ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் அணிகள் இதற்காக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. இத்துடன் எல்லா அணிகளும் தங்களுக்கான வியூகங்களை வகுத்துவருகின்றன.