ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு கோலி பெறும் தொகை எவ்வளவு கோடிகள் தெரியுமா??

இந்திய அணியின் கேப்டன் கேப்டன் எவர் ஸ்டைலிஷ் விராட் கோலி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு எவ்வளவு பணம் பெறுகிறார் எனத் தெரியுமா?? அது கேட்டால் மலைக்கவைக்கும் தொகையாகும்.

கடந்த 2009ல் இந்தியாவின் சீனியர் அணியில் அறிமுகமானதில் இருந்து நாளுக்கு நாள் கோலியின் கிரிக்கெட் முதிர்ச்சியும் ஸ்போர்ட்ஸ் மேனாக ஒரு அதிய மதிப்புமிக்க பிராண்டாகவும் மாறிவருகிறார் விராட் கோலி.

இந்திய அணிக்கு ஜாம்பவாங்கள் சச்சின், ட்ராவிட், கங்குலி என அனைவரு ஒரு சேர ஓய்வு பெறும் போது பொக்கிஷமாக அணியில் வந்து சேர்ந்தார் கோலி.

அப்போதிலிருந்து மெதுவாக உலக அளவில் கொடிகட்டிப்பறக்கும் ஒரு ஸ்போர்ட்ஸ் மேனாக வளந்தார். சமீபத்தில் ‘புமா’ (PUMA) ஸ்போர்ட்ஸ் பிராண்டுடன் ஓரு 100 கோடி மதிப்பிளான டீலில் ஒப்பந்தம் செய்தார். மேலும், இந்த பிராண்டுடன் செய்த இந்த ஒப்பந்தத்தால் இவர் புமாவிடம் இருந்து 100 கோடி ரூபாய் பெறுவார்.

HD image Virat Kohli star sports

இதற்கு முன்னர் தோனி மற்றும் சச்சின் போன்ற வீரர்கள் பெற்ற டீல் இது. மேலும், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பல கோடி ஃபாலோவர்சை வைத்திருக்கிறார் கோலி. அதே போல் தான் இன்ஸ்டாகிராமிலும் கிட்டத்தட்ட 1.67 கோடி ஃபாலோவர்சை வைத்திருக்கிறார்.

சமீபத்தில், ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை அறிவித்த உலக்த்தின் சிறந்த மார்க்கெட்டபில் அத்லெட்டுகளில் கால்பந்து வீரர் லியானல் மெஸ்ஸியை பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இன்ஸ்டகிராம் வலைதளம் அதிக ஃபாலோவர்ஸ் மற்றும் நல்ல  வரவேற்பு உள்ள கணக்குகளுக்கு  பணம் தரும் சமூக வலைதளமாகும். இதன்படி கோலி அவரது ஒவ்வொரு  இன்ஸ்டாகிராம் பதிவிற்கும் கிட்டத்தட்ட 3.2 கோடி ரூபாய் பணம் இன்ஸ்டாகிராமிடம் இருந்த் பெறுகிறார்.

ஆனால், இவையெல்லாம் வெருமனே வருவதில்லை. அவரது அசத்திய கிரிக்கெட் திறமை மற்றும் அவர் எப்போதும் கடைபிடிக்கும் அவரது உடல் கட்டமைப்பு விதிகள் என எல்லாம் சேர்த்து தான் அவருக்கு இப்படி ஒரு புகழையும் பனத்தையும் தேடித்த தந்துள்ளது என்றால் மிகையாகாது.

 

 

Editor:

This website uses cookies.