பல நாட்களாக காத்திருந்த சச்சினின் வாழ்க்கை வரலாறு படத்தை பார்த்து, படம் எப்படி இருக்கிறது என்று கூறினார்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள். சாம்பியன்ஸ் ட்ராப்பிக்காக இங்கிலாந்துக்கு இந்திய புறப்பட உள்ளதால், இந்த படத்தை முதலில் இந்திய கிரிக்கெட்டர்களுக்கு காண்பிக்க பட்டது. இதை பார்த்த வீரர்கள் பாக்ஸ் ஆபிசில் இந்த படம் பட்டையை கிளப்ப போகிறது என கூறுகிறார்கள்.
இங்கிலாந்துக்கு புறப்பட உள்ள இந்திய வீரர்களுக்கு மட்டும் இந்த படத்தை காண்பிக்க சச்சின் டெண்டுல்கர் முயற்சி செய்தார். இதனால், அனைத்து வீரர்களையும் சச்சின் டெண்டுல்கர் அழைத்தார்.
விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஜேம்ஸ் எர்ஸ்கின் தான் இந்த படத்தின் இயக்குனர். குழந்தை பருவம் மற்றும் சுருட்டை முடி வைத்துள்ள சச்சினில் இருந்து உலகின் மாபெரும் கிரிக்கெட்டர் வரை இந்த படத்தில் உள்ளது. இந்த படத்தின் பெயர் ‘சச்சின் : எ பில்லியன் ட்ரீம்ஸ்’ ஆகும். சச்சின் டெண்டுல்கரே இந்த படத்தில் நடித்துள்ளதால், அனைவரின் ஆர்வத்தையும் இந்த படம் ஈர்த்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் ட்ரைலர் வெளிவந்தது. இதனை பார்த்த ரசிகர்கள், படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.
இந்த படத்தை பார்த்த இந்திய வீரர்கள், அவர்களின் கருத்தை கூறினார்கள்.