நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள், மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இன்று இரண்டாவது டி20 ஆட்டம் ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் குப்தில்லும், மன்ரோவும் களமிறங்கினர். இருவரும் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை முதலில் அதிரடியாக விளையாடினர். ஆனால், அதன் பின்பு இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் மார்டின் குப்தில் 33 ரன்களிலும், மன்ரோ 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய கிராண்ட் ஹோமும், வில்லியம்சனும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ராஸ் டெய்லரும், செய்ப்ஃரட் ஆகியோர் நிதானமாக விளையாடினர், ஆனால் விரைவாக அவர்களால் ரன்கள் சேர்க்க முடியவில்லை. இறுதியில் ராஸ் டெய்லர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். செய்ப்ஃரட் 33 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு பின் களமிறங்கிய விராட் கோலியும் வெறும் 11 ரன்களில் அவுட் ஆனார். அதேசமயம் லோகேஷ் ராகுல் நிதானமாக நின்று விளையாடினார். அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர இருவரும் நிதானமாக நின்று ஆடினர். லோகேஷ் ராகுல் ஐம்பதை கடக்க ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் லோகேஷ் ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 57 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
.@RishabhPant17 is a young man with a huge amount of talent. I'm looking forward to working with him again during the IPL and I'm sure he'll be back in the Indian team sooner rather than later https://t.co/iYoWfORoRp
— Ricky Ponting AO (@RickyPonting) January 27, 2020