பந்து வீச்சாளர்க்ளை தாக்க ஒரு வித்யாசமான 'ட்ரிக்' வைத்துள்ளேன் : ரிஷப் பான்ட் 1

மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் தில்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றது.
6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை குவித்தது. ரிஷப் பந்த் (69), ஷ்ரேயஸ் ஐயர் (50) இணை அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.
பின்னர் ஆடிய ராஜஸ்தான் 5 விக்கெட்டை இழந்து 146 ரன்களையே எடுத்தது. ஜோஸ் பட்லர் 67, ஆர் சி ஷார்ட் 44 ரன்களை எடுத்தனர்.பந்து வீச்சாளர்க்ளை தாக்க ஒரு வித்யாசமான 'ட்ரிக்' வைத்துள்ளேன் : ரிஷப் பான்ட் 2
தில்லி டேர் டெவில்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே ஆன ஐபிஎல் கிரிக்கெட் 32-வது ஆட்டம் புதன்கிழமை இரவு தில்லியில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் தடை பட்டது. பின்னர் 1 மணி நேர தாமதத்துக்கு பின் நடுவர்களும், இரு அணிகளின் கேப்டன்களும் ஆடுகளத்தை பார்வையிட்டு விளையாடுவதற்கு ஒப்பதல் தெரிவித்தனர். இதையடுத்து 20 ஓவர்களில் இருந்து 18 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது. ஒரு பந்துவீச்சாளர் தலா 3 ஓவர்கள் வீதம் வீசலாம் என அறிவிக்கப்பட்டது.
தில்லி அணி சார்பில் பிரித்வி ஷா-காலின் மன்றோ தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ராஜஸ்தான் அணியின் குல்கர்னி முதல் ஓவரை வீசினார்.பந்து வீச்சாளர்க்ளை தாக்க ஒரு வித்யாசமான 'ட்ரிக்' வைத்துள்ளேன் : ரிஷப் பான்ட் 3 மன்றோ முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா அதிரடியாக ஆடிய நிலையில் அவருடன் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் இணை சேர்ந்தார். தலா 4 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 25 பந்துகளில் 45 ரன்களை எடுத்த பிரித்வி, ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவரிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார்.
பின்னர் ஷ்ரேயஸ் ஐயர்-ரிஷப் பந்த் இணைந்து சேர்ந்து ரன்களை சேர்த்தனர். 9-வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 88 ரன்களை தில்லி எடுத்திருந்தது. ஷ்ரேயஸ் ஐயர் 2 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 24 பந்துகளில் 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 16 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர். ஐயர்-பந்த் இணை அதிரடியாக ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். கேப்டன் ஷ்ரேயர் ஐயர் தலா 3 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 50 ரன்களில் உனதிகட் பந்தில் ஆட்டமிழந்தார்.பந்து வீச்சாளர்க்ளை தாக்க ஒரு வித்யாசமான 'ட்ரிக்' வைத்துள்ளேன் : ரிஷப் பான்ட் 4
மழையால் மீண்டும் பாதிப்பு: ரிஷப் பந்த் 5 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 69 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். விஜய்சங்கர் 17 ரன்களில் வீழ்ந்தார். மேக்ஸ்வெல் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் எல்பிடபிள்யு ஆகி ஆட்டமிழந்தார். 17.1 ஓவரின் துவக்கத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது தில்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை எடுத்திருந்தது.
ராஜஸ்தான் அணி தரப்பில் ஜெயதேவ் உனதிகட் 3 விக்கெட்டையும், குல்கர்னி, ஆர்ச்சர், ஷ்ரேயஸ் கோபால் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
12 ஓவர்களில் 151 ரன்கள்இலக்கு: இரண்டாவது முறையாக மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால், ராஜஸ்தான் அணிக்கு 12 ஓவர்களில் 151 ரன்களை எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர், டி ஆர்சி ஷார்ட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் 14 ரன்களை சேர்த்தனர்.பந்து வீச்சாளர்க்ளை தாக்க ஒரு வித்யாசமான 'ட்ரிக்' வைத்துள்ளேன் : ரிஷப் பான்ட் 5
ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடியதில் ராஜஸ்தான் அணி ஸ்கோர் மளமளவென ஏறியது. 7 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 67 ரன்களை எடுத்த பட்லர் மிஸ்ரா பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் சஞ்சு சாம்சன் 3 ரன்களிலும், ஸ்டோக்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 9 ஓவர்களில் ராஜஸ்தான் 100 ரன்களை பெற்றிருந்தது. 25 பந்துகளில் 44 ரன்களை குவித்த ஷார்ட், மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார்.
ராகுல் திரிபாதி, கெளதம் ஆகியோர் இறுதியில் ரன்களை குவிக்க முயன்றனர். ஆனால் ராகுல் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். கெளதம் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்து வீச்சாளர்க்ளை தாக்க ஒரு வித்யாசமான 'ட்ரிக்' வைத்துள்ளேன் : ரிஷப் பான்ட் 6
12 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து ராஜஸ்தான் 146 ரன்களையே எடுக்க முடிந்தது. தில்லி தரப்பில் பெளல்ட் 2 விக்கெட்டையும், மேக்ஸ்வெல், மிஸ்ரா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் தில்லி அணி 6-வது இடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் அணி 7-வது இடத்துக்கும், மும்பை அணி கடைசி இடத்துக்கும் தள்ளப்பட்டன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *