ஐசிசி டெஸ்ட் தரவரிசை அறிவிப்பு ரிஷப் பண்ட் அற்புதம்
இந்தியா மற்றும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முடிவடைந்த நிலையில் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை அறிவித்துள்ளது இந்த பட்டியலில் வழக்கம்போல உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் இந்தியாவின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர் 922 புள்ளிகளுடன் கடந்த பல மாதங்களாக முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 897 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான தொடரில் அற்புதமாக ஆடி 500 ரன்களுக்கு மேல் குவித்து வரும் 881 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் 22 வயதான இளம் வீரர் ககிசோ ரபாடா 93 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 794 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார் மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 763 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்
பேட்ஸ்மேன் தரவரிசை:
பாஸ் | ஆட்டக்காரர் | நாடு | மதிப்பீடு |
1 | விராத் கோலி IND |
இந்தியா | 922 |
2 | கேன் வில்லியம்சன் | நியூசிலாந்து | 897 |
3 | சேதுஷ்வர் புஜாரா | இந்தியா | 881 |
4 | ஸ்டீவ் ஸ்மித் | ஆஸ்திரேலியா | 874 |
5 | ஜோ ரூட் | இங்கிலாந்து | 807 |
6 | டேவிட் வார்னர் | ஆஸ்திரேலியா | 772 |
7 | ஹென்றி நிக்கோலஸ் | நியூசிலாந்து | 763 |
8 | டீன் எல்கர் | எஸ்.ஏ. | 727 |
9 | டிமுத் கருணாரட்ன | எஸ்.எல் | 715 |
10 | ஐடின் மார்கரம் | எஸ்.ஏ. | 698 |
பந்து வீச்சாளர்களின் தரவரிசை:
பாஸ் | ஆட்டக்காரர் | நாடு | மதிப்பீடு |
1 | ககிசோ ரபாடா | எஸ்.ஏ. | 893 |
2 | ஜேம்ஸ் ஆண்டர்சன் | இங்கிலாந்து | 874 |
3 | பாட் கம்மின்ஸ் | ஆஸ்திரேலியா | 804 |
4 | வெர்னான் பிலாண்டர் | எஸ்.ஏ. | 804 |
5 | ரவீந்திர ஜடேஜா | இந்தியா | 794 |
6 | முகம்மது அப்பாஸ் | பாகிஸ்தான் | 789 |
7 | ட்ரென்ட் போல்ட் | நியூசிலாந்து | 771 |
8 | டிம் சவுதி | நியூசிலாந்து | 767 |
9 | ரவிச்சந்திரன் அஸ்வின் | இந்தியா | 763 |
10 | ஜேசன் ஹோல்டர் | மேற்கிந்தியத் | 751 |
ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை அடைந்துள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. கடைசி நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. அடுத்ததாக, இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் ஜனவரி 12 முதல் தொடங்குகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மற்றும் நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்திலிருந்து வேகப்பந்துவீச்சாளர் பூம்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வருகை தந்து 5 ஒருநாள், 3 டி20-யில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் பூம்ரா நல்ல உடற்தகுதியுடன் கலந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மற்றும் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முஹமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு சித்தார்த் கெளலும் தேர்வாகியுள்ளார். நியூஸிலாந்துச் சுற்றுப்பயணம் பிப்ரவரி 10-ம் தேதியுடன் முடிவடைகிறது.