ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்தது. புஜாரா 123 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 307 ரன் எடுத்தது. புஜாரா 71 ரன்களும் ரஹானே 70 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லியான் 6 விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய அணி 323 ரன் முன்னிலை பெற்றிருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நான்காம் நாளான நேற்று அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்களுடனும் ஹெட் 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் அஸ்வின், ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று காலை தொடர்ந்தது. ஹெட் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மார்ஷ் விக்கெட்டை, பும்ரா சாய்த்தார். இதையடுத்து கேப்டன் பெய்னும் கம்மின்ஸும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். பெய்ன் 41 ரன் எடுத்திருந்த போது பும்ரா வீசிய பந்தில், ரிஷாப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்திருந்தது.
அடுத்து ஸ்டார்க் வந்தார். இவரும் கம்மின்ஸும் பொறுமையாக ஆடினர். இவர்கள் விக்கெட்டை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். கம்மின்ஸ் 121 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் எடுத்த நிலையில் அவரது விக்கெட்டையும் பும்ரா வீழ்த்தினார். அடுத்து முகமது ஷமி, ஸ்டார்க் விக்கெட்டை சாய்க்க பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்திய அணி வெற்றிக்கு ஒரு விக்கெட் தேவை பட்ட நிலையில், லியானும்
ஹசல்வுட்டும் விக்கெட்டை எளிதாக விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக ஆடினர். பின்னர் லியான் விக்கெட்டை அஸ்வின் சாய்த்ததும் ஆஸ்திரேலியாவின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணி 291 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 31 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது.
இந்திய அணியின் 12 வது முறையாக ஆஸ்திரேலியாவில் இப்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதற்கு முன் வந்த 11 முறையும், இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதில்லை. இப்போது அந்த வரலாற்றை மாற்றி வெற்றியுடன்
தொடங்கியுள்ளது இந்திய அணி.
ரிஷப் பன்ட் – 11 கேட்சுகள்
ஆஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அடிலெய்டில் நடந்த போட்டியில் 11 கேட்சுகள் பிடித்து அசத்தியுள்ளார். இந்திய அணியின் 12 வது முறையாக ஆஸ்திரேலியாவில் இப்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதற்கு முன் வந்த 11 முறையும், இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதில்லை. இப்போது அந்த வரலாற்றை மாற்றி வெற்றியுடன்