காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில்,  சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற கூடாது என்று பல்வேறு போராட்டங்கள் நேற்று நடைப்பெற்றன. இந்த நிலையில், தான் ஆர்.ஜே பாலாஜி  தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இந்த வீடியோ நேற்றைய தினம், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. கூடாவே பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.  ஐபிஎல் vs காவிரி மேலாண்மை வாரியம்,  சோறா? ஸ்கோரா  இப்படியெல்லாம் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற கூடாது என்று தொடர்ந்து முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.ipl protest க்கான பட முடிவு

இந்த நேரத்தில், தான் ஐபிஎல் போட்டியில் தமிழில்  கமெண்டரிக் கொடுக்கும் ஆர்.ஜே பாலாஜிக்கு எதிராக சிலர் கருத்துக்களை தெரிவித்தனர். முதல் நாள் ஐபிஎல் போட்டியில்  ஆர்.ஜே பாலாஜி கருப்பு சட்டை அணிந்து வந்து மாஸ் காட்டினார்.

இதைக் கண்ட பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தமிழ்நாட்டில்  நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு உட்பட பல போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்த பாலாஜி, ஏன் காவிரி விவகாரத்தில் இன்னும் வாய் திறக்கவில்லை என்று அவரின் துறையைச் சார்ந்த சக பணியாளர்களும் கேள்வி எழுப்பினர்.ipl protest க்கான பட முடிவு

இந்நிலையில், நேற்று சென்னை சேப்பாக்கத்தில்  நடைப்பெற்ற  ஐபிஎல் போட்டியில்   ஆர். ஜே பாலாஜி வரவில்லை. மேலும், தமிழில் கமெண்டரி கொடுக்கும் வேலையையும் செய்யவில்லை. இதற்கு காரணமாக  அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அதில்,. “  இன்று ஐபிஎல் மேட்ச்சில் நான் செய்ய வேண்டிய என் வர்ணனையாளர் வேலையைச் செய்யவில்லை. ஒரு தமிழனாக என் பங்களிப்பு இது. இந்த முடிவை நான் சார்ந்திருக்கும் நிர்வாகத்திற்கு சொல்லும்போது என் உணர்வுக்கும், என் மக்கள் உணர்வுக்கும் மதிப்பளித்தனர். அவர்களுக்கு என் நன்றி.ipl protest க்கான பட முடிவு

ஐபிஎல் மேட்ச் நாம் பார்க்கக்கூடாது என்று கொஞ்ச நாளைக்கு முன்பு சொன்னார்கள். பிறகு, மைதானத்தில் பார்க்க வேண்டாம், டிவியில் பார்க்கலாம் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு ஐபில் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட வேண்டும் என்றார்கள். இப்போது ஐபிஎல் போட்டியே நடக்கக்கூடாது என்கிறார்கள். மேலும், போட்டி நடக்கிறதோ, இல்லையோ என்னை மாதிரி ஆட்கள் அதில் வேலை செய்யக்கூடாது என்று சொன்னார்கள். இது எல்லாமே எதற்கு என்றால் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் என்கிறார்கள். இது சரியா என்ற கேள்வி எழுகிறது.

 

 

ப்போதிருக்கும் நிலைமை பிரதமருக்கோ, மத்திய அரசுக்கோ தெரியாதா? நாட்டின் மொத்த கவனத்தையும் பெற வேண்டுமென்றால் 234 எம்.எல்.ஏக்களும், 40 எம்.பி.க்களும் ராஜினாமா செய்யலாம். எல்லோருமே ஒரு மாநிலத்தில் நிர்வாகமே இல்லையா என்று திரும்பிப் பார்ப்பார்கள்.

மேலாண்மை வாரியம் அமைக்கும் வரைக்கும் தேர்தலில் நிற்கமாட்டோம் என்று போராடினால் அது சரியாக இருக்கு. ஏனெனில் நாம் ஓட்டு போட்டது இவர்களுக்குத்தான். தோனிக்குக் கிடையாது.இளைஞர்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டு தீர்வை நோக்கிப் போராட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *