இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடயேயான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்குகியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கள இறங்கினர்.
துவக்க முதலே அற்புதமாக பந்து வீசிய நியூசிலாந்தின் ட்ரென்ட் போல்ட் இந்திய அணி 16 ரன்னில் இருந்த போது அவரது பந்து வீச்சில் சிக்கய சிகர் தவன் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பின்னர் அவரது பந்து வீச்சை எதிர்கொண்டார் மற்றொரு துவக்க ஆடக்காரர் ரோகித் சர்மா. அதுவரை டிம் சௌத்தி ஓவரில் ஒரு சிக்சர் அடித்து நன்றாக ஆடிக்கொண்டிருந்தார் ரோகித் சர்மா. 6ஆவது ஒவரை வீசினார் மின்னல் ட்ரென்ட் போல்ட். அந்த பந்து அற்புதமாக ஸ்விங் ஆகி ரோகித் பேடில் புகுந்து அவரது ஸ்டெம்பை பதம் பார்த்தது.
அந்த வீடியோவை கீழே பார்க்கலாம்.
https://twitter.com/VKCrick/status/922021575142060033
தற்போது வரை இந்திய 14 ஓவருக்கு 52 றன் எடுத்து 2 விக்கட் இழந்து களத்தில் விராட் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் உள்ளனர்.