
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோகித் மற்றும் தவான் இணை பார்ட்னர்சிப்பில் புதிய சாதனை படைத்துள்ளனர்.
இந்திய அணிக்கு கந்த 2013 சாம்பியன்ஸ் கோப்பையில் இருந்து துவக்க வீரர்களாக களம் இறங்கி வருகின்றனர். அந்த சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
அடுத்து 2015 ஒருநாள் உலகக்கோப்பையிலும் இவர்கள் இருவரும் தான் ஓப்பனர்ஸ். அவ்வப்போது ரகானே ஓப்பனராக கள்ம் இறங்கினாலும், ரோகித்-தவான் மட்டுமே பிரதான ஓப்பனர்களாக இருந்தனர்.
அடுத்தடுத்து இந்திய அணிக்காக அற்புதமாக ஆடி வந்தனர். பின்னர், தற்போது நடந்த 2017 சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இந்த அணியிலும் இவர்கள் இருவரும் தான் துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.
தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து போட்டியில் இருவரும் ஓப்பனர்களாக இறங்கி இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கொடுத்தனர். தற்போது ஒருநாள் போட்டிகளில் ஓப்பனர்கலாக இருவரும் 3000 ரன்னைக் கடந்துள்ளதுனர். இதற்கு முன்னர் சச்சின்-கங்குலி , மற்றும் சச்சின் சேவாக் இணை மட்டுமே இந்திய அணிக்காக ஓப்பனர்களாக 3000 ரன்னைக் கடந்திருந்தனர்.

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு அதிக ரன் அடித்த இணைகளின் பட்டியல் :
- சச்சின்-கங்குலி 6610 ரன்கள்
- சச்சின்-சேவாக் 3919 ரன்கள்
- ரோகித்-தவான் 3000 ரன்கள்