ஜெயசூரியா சாதனையை அசால்டாக முடித்த ரோஹித்: அடுத்த போட்டியில் ரிக்கி பாண்டிங் 1

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ரோகித்சர்மா சதம் அடித்ததன் மூலம் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல ரோகித் சர்மா முக்கிய பங்கு வகித்தார். அவர் அதிரடியாக விளையாடி 119 ரன் குவித்தார். இதில் 8 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவின் 29-வது சதமாகும். 224 போட்டியில் 217 இன்னிங்சில் இதை எடுத்தார். இதன் மூலம் அதிக சதம் அடித்த வீரர்களில் 4-வது இடத்தில் இருந்த ஜெயசூர்யாவை முந்தினார்.

ஜெயசூரியா சாதனையை அசால்டாக முடித்த ரோஹித்: அடுத்த போட்டியில் ரிக்கி பாண்டிங் 2
India captain Virat Kohli and opener Rohit Sharma have strengthened their grip on the top two positions while left-hander Shikhar Dhawan has advanced in the MRF Tyres ICC Men’s ODI Player Rankings after notable performances against Australia.

தெண்டுல்கர் (49 சதம்), விராட் கோலி (43), ரிக்கி பாண்டிங் (30) ஆகியோருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா தற்போது 4-வது இடத்தில் உள்ளார். ஜெயசூர்யா 28 செஞ்சுரியுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

32 வயதான ரோகித் சர்மா 29 சதத்தில் 19 செஞ்சுரியை கடைசி 70 இன்னிங்சில் எடுத்து (2017-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து) முத்திரை பதித்தார். 2017-ம் ஆண்டுக்கு முன்பு 147 இன்னிங்சில் 10 சதமே அடித்து இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா 8-வது சதத்தை (40 இன்னிங்ஸ்) எடுத்தார். தெண்டுல்கர் 9 சதம் (70 இன்னிங்ஸ்) அடித்து முதலிடத்தில் உள்ளார். விராட்கோலி 38 இன்னிங்சில் 8 சதம் அடித்து இருந்தார். அவரை ரோகித் சமன் செய்தார்.

ஒரு நாட்டுக்கு எதிராக 8 சதங்களுக்கு மேல் இந்திய வீரர்கள் மட்டுமே அடித்துள்ளனர். கோலி, தெண்டுல்கர், ரோகித் சர்மா இந்த வரிசையில் உள்ளனர்.ஜெயசூரியா சாதனையை அசால்டாக முடித்த ரோஹித்: அடுத்த போட்டியில் ரிக்கி பாண்டிங் 3

கோலி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 9 சதம் அடித்து இருக்கிறார்.

ரோகித் சர்மா 4 ரன் எடுத்த போது ஒருநாள் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை கடந்தார். 9 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் எடுத்த 3-வது வீரர் ரோகித் சர்மா ஆவார். 217 இன்னிங்சில் அவர் எடுத்தார்.

விராட்கோலி 194 இன்னிங்சில் எடுத்து முதல் இடத்திலும், டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) 208 இன்னிங்சில் எடுத்து 2-வது இடத்திலும் உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *