யோ-யோ டெஸ்டில் வெற்றி பெற்றதால் ரோகித் சர்மா 23-ந்தேதி சக வீரர்களுடன் இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறார்.
யோ-யோ டெஸ்டில் ரோகித் சர்மா வெற்றி- இங்கிலாந்து பறக்கிறார்
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் தற்போது யோ-யோ டெஸ்டில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பிடித்திருந்தார். இவர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா இடம்பிடித்தார். அதேபோல் முகமது ஷமி (ஆப்கானிஸ்தான் டெஸ்ட்) மற்றும் சஞ்சு சாம்சன் (இந்தியா ஏ) ஆகியோரும் வாய்ப்பை இழந்தனர்.
இந்நிலையில் இந்திய அணியில் உள்ள எல்லோருக்கும் யோ-யோ டெஸ்ட் நடைபெற்று முடிந்த நிலையில் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மாவிற்கு யோ-யோ டெஸ்ட் நடைபெறாமல் இருந்தது. இவருக்கு ஐபிஎல் தொடரின்போது இரண்டு முறை யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட்டது அப்போது தோல்வியடைந்தார்.
இதனால் தற்போது ரகனாவை மாற்று வீரராக தயார் செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற யோ-யோ டெஸ்டில் ரோகித் சர்மா தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் மூலம் இவர் அணியின் சக வீரர்களுடன் இங்கிலாந்து பறக்கினார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி வரும் 23-ந்தேதி இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது.

சஞ்சு சாம்சன், மொகமத் ஷமி, அம்பாத்தி ராயுடு ஆகியோர் சர்ச்சைக்குரிய யோ-யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்ததால் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாமல் போயுள்ளது கடும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
ஏன் அணித்தேர்வு செய்து விட்டு பிறகு யோ யோ டெஸ்ட் நடத்த வேண்டும், யோ யோ டெஸ்ட் வைத்து விட்டு அணித்தேர்வு செய்ய வேண்டியதுதானே என்ற கேள்வி எழுந்துள்ளது, இப்போது யோ யோ டெஸ்ட் விரும்பத்தகாதவர்களை ஒழிப்பதற்கான நடைமுறையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்போது இந்திய அணியின் செல்லப்பிள்ளை ரோஹித் சர்மா அதில் தோல்வியடைந்தால் அணியிலிருந்து நீக்கப்படுவாரா? என்பதே கேள்வி, அப்படி நீக்கப்பட்டால் அது நியாயம் என்று வாதிடுவது தவறு, அவரைப்போன்ற ஒரு பேட்ஸ்மெனை இழக்கும் யோ-யோ டெஸ்ட்தான் கேலிக்கூத்தான ஒரு டெஸ்ட் என்ற கருத்துகள் பரவலாகிவருகின்றன.