ஒருநாள் போட்டிகளில் ஆட ரோகித் உலகின் தலைசிறந்த வீரர்: கவுதம் கம்பிர்!! 1
Praising Rohit Sharma for his 22nd ODI ton, the Aussie seamer said, “Rohit batted really well

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட தற்போதைய உலகின் தலைசிறந்த வீரர் ரோகித் சர்மா தான் என கவுதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.

சிட்னி ஒருநாள் போட்டியில் 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்ததும், பிறகு ரோஹித் சதமும் அவருடன் தோனி அமைத்த கூட்டணி குறித்தும், தோல்வி குறித்தும் இந்திய கேப்டன் விராட் கோலி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா-தோனி கூட்டணி 28 ஓவர்களில் 137 ரன்களைச் சேர்த்து நம்பிக்கை அளித்தாலும் வேகத்தில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக ஆடியிருக்கலாம் என்று விராட் கோலி தெரிவித்தார்.

ஒருநாள் போட்டிகளில் ஆட ரோகித் உலகின் தலைசிறந்த வீரர்: கவுதம் கம்பிர்!! 2
MS Dhoni was given out LBW in the 33rd over for 51, but TV replays showed that the ball had pitched outside the leg-stump.

ஆட்ட முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

நாங்கள் ஆடிய விதம் நிச்சயம் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. பந்து வீச்சில் நன்றாகச் செயல்பட்டோம். பிட்ச் 300+ பிட்ச் ஆகும், இதில் 288 ரன்கள் எடுத்து வெற்றிபெறக்கூடிய இலக்குதான்.

3 விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்தது நல்லதல்ல. ரோஹித் சர்மா தனித்துவமான முறையில் ஆடினார், தோனி அவருக்கு உறுதுணையளித்தார். ஆனால் கொஞ்சம் நாம் ஆட்டத்தின் வேகத்தில் இன்னும் கொஞ்சம் நன்றாகச் செயல்பட்டிருக்கலாம். அங்குதான் வீழ்ந்துவிட்டோம்.

ஒருநாள் போட்டிகளில் ஆட ரோகித் உலகின் தலைசிறந்த வீரர்: கவுதம் கம்பிர்!! 3
BRISTOL, ENGLAND – JULY 08: India batsman Rohit Sharma (r) and Hardik Pandya celebrate victory during the 3rd Vitality International T20 match between England and India 

ரோஹித்தும், தோனியும் ஆட்டத்தை நீட்டித்து நமக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினர், ஆனால் அப்போது எம்.எஸ். (தோனி) ஆட்டமிழந்தார். இது ரோஹித் சர்மா மீது அழுத்தத்தை அதிகப்படுத்தியது. இன்னொரு கூட்டணி அமைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக ஆட்டம் சென்றிருக்கும்.

ஆனால் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது பிரச்சினைக்குக் காரணமானது. மீண்டும் எழும்பாதவாறு தொழில்பூர்வமாக ஆஸ்திரேலியா ஆடினர்.ஒருநாள் போட்டிகளில் ஆட ரோகித் உலகின் தலைசிறந்த வீரர்: கவுதம் கம்பிர்!! 4

இன்றைய தினத்தில் ஆஸ்திரேலியா எங்களை விட நன்றாக ஆடியது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். முடிவுகள் பற்றி பெரிய அளவில் நாங்கள் கவலைப்படுவதில்லை. இந்த மாதிரி தினங்கள் ஒரு அணியாக இன்னும் செயலாற்ற வேண்டிய விஷயங்களை நமக்கு அறிவுறுத்துகிறது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *