அடப்போங்கடா… தரமான பிளான் போட்ட தல தோனி; டக் அவுட்டாகி மிக மிக மோசமான சாதனை படைத்த ரோஹித் சர்மா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டானதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் மிக மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷனும், வழக்கத்திற்கு மாறாக கேமீரான் க்ரீன் துவக்க வீரராக களமிறங்கினார்.
எதோ திட்டத்துடன் கேமிரான் கிரீனை மும்பை இந்தியன்ஸ் அணி துவக்க வீரராக களமிறங்கிய நிலையில், கேமிரான் க்ரீனோ வெறும் 6 ரன்னில் விக்கெட்டை இழந்தார். மற்றொரு துவக்க வீரரான இஷான் கிஷன் 7 ரன்களில் வெளியேறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுப்பதற்காக துவக்க வீரராக களமிறங்காமல், மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த போட்டியிலும் ஒரு ரன்னும் கூட எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். 3 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா அதில் ஒரு ரன் கூட எடுக்காமல் தீபக் சாஹர் வீசிய பந்தில், தேவை இல்லாத ஷாட் அடிக்க நினைத்து கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்த போட்டியில் டக் அவுட்டானதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கடந்த போட்டியிலும் டக் அவுட்டான ரோஹித் சர்மா, அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக், சுனில் நரைன் ஆகியோருடன் முதலிடத்தை பகிர்ந்திருந்தார், ஆனால் சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டக் அவுட்டானதன் மூலம், தினேஷ் கார்த்திக், சுனில் நரைன் ஆகியோரை இரண்டாவது இடத்திற்கு தள்ளி, ரோஹித் சர்மா முதல் இடத்தை வேதனையுடன் பிடித்துள்ளார்.
அதே போன்று ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான கேப்டன்கள் வரிசையில் கவுதம் கம்பீரை (10) பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா (11) முதலிடத்தை பிடித்துள்ளார்.