மூன்றாவது ஒருநாள் இரட்டைச் சதம், அதிவேக டி20 சதம். இரண்டையும் மனைவியின் கண் முன்னால் நிகழ்த்தி அசத்தியுள்ளார் ரோஹித் சர்மா.
அசத்தலாக ஆடிய ரோஹித் 35 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் சதமடித்தார். 43 பந்துகளுக்கு 12 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களை சிதறடித்திருந்த அவர், 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனஞ்ஜெயாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
35 பந்துகளில் சதமடித்தார் ரோஹித். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் சாதனையை (35 பந்துகள்) ரோஹித் சமன் செய்துள்ளார். இந்திய வீரர்களில் இத்தகைய அதிவேக சதமடித்த ஒரே வீரர் ரோஹித் ஆவார்.
இந்தப் போட்டியையும் காண ரோஹித் சர்மாவின் காதல் மனைவி ரித்திகா சஜ்டே நேரில் வந்திருந்தார். இந்தமுறை கணவரின் சதத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் ரித்திகா. ஆனால் ரோஹித் இரட்டைச் சதம் எடுத்தபோது நடந்த கதையே வேறு.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். முதலில் 126 பந்துகளில் 116 ரன்கள் குவித்திருந்த ரோஹித், கடைசி 27 பந்துகளில் 92 ரன்கள் (11 சிக்ஸ், 3 பவுண்டரி) குவித்தார். இது ரோஹித் சர்மாவின் 3-வது இரட்டைச் சதம். ஒருநாள் போட்டியின் சரித்திரத்தில் இதுவரை எந்தவொரு வீரரும் 3 இரட்டைச் சதங்களை எடுத்ததில்லை.
ரோஹித் சர்மா-ரித்திகா சஜ்டே கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இந்த வருடம் 2-ஆவது திருமண நாள். இந்த நாளில் மகிழ்ச்சியுடன் களம் இறங்கிய ரோஹித், இரட்டை சதத்தைப் பதிவு செய்து தனது மனைவிக்கு பரிசாக அளித்தார். முன்னதாக, அவர் 200 ரன்களை நெருங்குவதற்குள் ரித்திகா பதற்றமானார். எனினும், ரோஹித் இலக்கை அடைந்தவுடன் அவர் ஆனந்த கண்ணீர் சிந்தினார். இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.
இரட்டை சதம் அடித்ததுடன், இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் இந்த நாளை மிகச் சிறந்த நாளாக கருதுகிறேன். இந்த நாள் (டிச. 13) எனக்கு திருமண நாளாகவும் அமைந்துவிட்டது. இரட்டை சதத்தை திருமண நாள் பரிசாக எனது மனைவிக்கு அளிக்கிறேன் என்று ஆட்ட நாயகன் விருது வென்ற கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
இரட்டைச் சதம் எடுத்தபோது பதற்றத்துடன் இருந்த ரித்திகா, நேற்று இயல்பாகக் காணப்பட்டார். ரோஹித் அதிவேக சதமெடுத்தவுடன் கண்ணாடி அறைக்குள் இருந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கைத்தட்டி மகிழ்ந்தார். மனைவி சமீபத்தில் நேரில் கண்ட இரு ஆட்டங்களிலும் ரோஹித் சர்மா சாதனை செய்து அசத்தியுள்ளார்
தன் மனைவி முன்னை நிகழ்த்திய இந்த அத்தனை சாதனைகளும் அற்புதமானவை. இதற்கு கிட்டதட்ட காரணம் எல்லாம் தன் மனைவி தான் என பலமுறை கூறியுள்ளார் ரோகித்.
இருவரும் 6 வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஒரு நிகழ்ச்சியில் தான் எங்கு ரித்திகாவை முதலில் பார்த்தேன் எனக் கூறியுள்ளார் ரோகித்.
அது காமெடியான கதை. எனக்கு 20 வயது இருக்கும். அப்போது ஒரு சூட்டிங்கிற்கு சென்றேன். என்ன செய்வது எனக் கூட தெரியாது அப்போது. யுவராஜ் மற்றும் இர்பான் பதான் ஆகியோரும் கூட அந்த சூட்டிங்கிற்கு வந்திருந்தனர். நானா அங்கு சென்று போது யுவராஜ் பக்கத்தில் ரித்திகா அமர்ந்திருந்தாள். அப்பது யுவராஜ் எனக்கு சீனியர். மேலும் ரித்திகா யுவராஜ் சிங்கிற்கு செலிபிரிட்டி மேனேஜர். யுவராஜுக்கு ஹாய் சொல்லிவிட்டு ரித்துக்காவை பார்த்தேன், உடனே யுவராஜ் சிங், ‘ அவள் எனக்கு தங்கை மாதிரி, நீ அவளை பார்க்காதே அவள் பக்கத்தில் வராதே என மிரட்டினார்.
நானும் என்னடா பொண்ணு இவ இப்பிடி திமிரு பண்றாலே என அன்றைய சூட்டிங் முழுக்க ரித்திகாவை பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தேன். சூட்டிங் முடிந்தவுடன், படியில் இருந்து கீழே இறங்கி செலக் போது அவள் கீழே நின்று கொண்டிருந்தாள். அவளே வந்து என்னிடம், உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா எனக் கேட்டாள். அன்று நண்பர்கள் ஆனோம்.
பின்னர் நடந்தது எல்லாம் வரலாறு சொல்லும்.
எனக் கூறினார் ரோகித்.