தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான பயிற்சி ஆட்ட அணி அறிவிப்பு! ரோகித் சர்மா கேப்டன்! 1

தென்னாப்பிரிக்க அணி, ரோஹித் சர்மா தலைமையிலான போர்டு பிரசிடென்ட் லெவன் அணி இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் விஜயநகரத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, டி20 தொடரை சமன் செய்தது.

முதலாவது டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், 3ஆவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான பயிற்சி ஆட்ட அணி அறிவிப்பு! ரோகித் சர்மா கேப்டன்! 2

இந்நிலையில், ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, அக்டோபர் 2ஆம் தேதி முதல் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

அதற்கு முன்பு போர்டு பிரசிடென்ட் லெவன் அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தை எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்கா.

போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு ரோஹித் சர்மா தலைமை வகிக்கிறார்.
மயங்க் அகர்வால், அபிமன்யு ஈஸ்வரன், பிரியங்க் பன்சால், கருண் நாயர், சித்தேஷ் லாத், ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்)உள்ளிட்ட இளம் வீரர்களுக்குடன் உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணியில் மார்க்ரம், டீன் எல்கர், பவுமா, குவின்டன் டி காக், வெர்னன் பிலாந்தர், லுங்கி கிடி,  ககிúஸா ரபாடா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான பயிற்சி ஆட்ட அணி அறிவிப்பு! ரோகித் சர்மா கேப்டன்! 3

ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயநகரத்தில் காலை 9.30 மணிக்கு பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது.

இந்தியா-தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் இடையே 2ஆவது டி20 ஆட்டம், குஜராத் மாநிலம், சூரத் நகரில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, 11 ரன்கள் வித்தியாசத்தில்

 

அணிகள்:

வாரியத் தலைவர்கள் லெவன் அணி: மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா (கே), அபிமன்யு ஈஸ்வரன், பிரியங்க் பஞ்சால், கருண் நாயர், சித்தேஷ் லாட், ஸ்ரீகர் பாரத் (கீ), ஜலாஜ் சக்சேனா, தர்மேந்திரசிங் ஜடேஜா, ஷார்துல் தாகூர், உமேஷ் யாதவ், அவேஷ் கான், இஷான் போரெல்

தென்னாப்பிரிக்கா அணி: ஐடன் மார்க்ராம், டீன் எல்கர், தியூனிஸ் டி ப்ரூய்ன், ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), டெம்பா பவுமா, குயின்டன் டி கோக் (கீ), வெர்னான் பிலாண்டர், கேசவ் மகாராஜ், லுங்கி என்ஜிடி, காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, டேன் பீட், ஹென்ரிச் கிளாசென், ஜுபைர் ஹம்சா, செனுரன் முத்துசாமி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *