
மீண்டும் தனது சர்வேதச கிரிக்கெட் பயனத்தை துவங்கவுள்ளார் நெதர்லாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரயான் டென் டஸ்சாட்டி. இந்த செய்தியை நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்தது. ஐ.சி.சி நடத்தும் அசோசியேட் அணிகளுக்கான உலக் கிரிக்கெட் லீக்கில் இவர் கலந்து கொள்வார் என அறிவித்துள்ளது நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம்.
He recently led Essex to the title (Credits: Getty)கடைசியாக 2011 உலகக்கோப்பையின் போது தனது கடைசி சர்வததேச போட்டிகளை ஆடினார் ரயான். அதன் பின்னர் பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 லீக் தொடரில் ஆட சென்றுவிட்டார் ரயான். சமீபத்தில் நடந்த கவுன்ட்டி தொடரில் எச்செக்ஸ் அணியின் கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார் ரயான்.

மேலும் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நடந்த டி தொடர்களில் பங்கேற்று விளையாடி வந்தார் ரயான் டென் டஸ்சாட்டி.
தற்போது மீண்டும் தனது நாட்டு அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடவுள்ள ரயானைப் பற்றி நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் ரயான் கேம்பெல் கூறியதாவது,
ரயான் போன்ற ஒரு திறமை வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர் அணிக்கு திரும்பியுள்ளது அணிக்கு ஒரு பெரிய உற்சாகத்தைக் கொடுக்கும். அவர் அணியில் இருந்தால் அவரால் ரன் அடிக்க முடியும் , பந்து வீசி விகெட் எடுக்க முடியும், அற்புதமாக ஃபீல்டிங் செய்ய முடியும்.
எனக் கூறினார் பயிற்சியாளர் ரயான் கேம்பெல்
நெதர்லாந்து அணி விவரம் : பீட்டர் போரென் (கேப்டன்), வெஸ்லீ பாரஸி, பென் கூப்பர், ரயான் டென் டஸ்சாட்டி, பால் வேன் மீகரீன், ஸ்டீபன் மைபர்க், மேக்ஸ் ஓ’டாவ்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ், சிகந்தர் ஸுல்ஃபிகுர், ரோலொஃப் வாண் டெர் மெர்வ், ஷேன் ஸ்நெட்டர், பீட்டர் ஷீலர், டிம் வன் டெர் காக்டென், ஃப்ரெட் கலீசன், விவ் கிங்மா