கிரிக்கெட் விளையாட பிசிசிஐ விதித்த வாழ் நாள் தடைக்கு எதிராக ஸ்ரீசாந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு வரும் பிப்.5 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள, பிசிசிஐ அவருக்கு ஆயுள்காலத் தடை விதித்தது.
In 2013, the 34-year-old pacer Sreesanth was handed over a life ban by the BCCI after the 2013 Indian Premier League (IPL) spot-fixing scandal surfaced and forced the Board to act swifty.
இந்நிலையில் டெல்லி அமர்வு நீதிமன்றம், தன்னை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தும், தன் மீதான தடையை பிசிசிஐ நீக்கவில்லை என்று கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ஸ்ரீசாந்த் மீதான ஆயுள்காலத் தடையை நீக்கி முதலில் உத்தரவிட்டது. கேரள உயர் நீதிமன்றத்தின் ஒருநபர் அடங்கிய அமர்வின் உத்தரவை எதிர்த்து, பிசிசிஐ தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
Cricket, India, BCCI, Sreesanth, Chennai Super Kings, Rajasthan Royals In July 2015, the Patiala House Court exempted as many as 36 accused which included Sreesanth after the fixing saga took Indian cricket by storm. Moreover, the BCCI has already rejected to lift the life ban imposed on Sreesanth which further forced the bowler to file the request before the Chief Justice of India Justice Dipak Misra, who further agreed to hear the case.
இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை உறுதி செய்து உத்தரவிட்டது. கேரள உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக ஸ்ரீசாந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.