கதை என்ன?
ஸ்ரீசாந்த் மேல் இருந்த தடையை இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை நீக்காததால், அவர் மீண்டும் எப்போது கிரிக்கெட் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இன்னும் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால், சினிமாவில் நடிக்க உள்ளார் ஸ்ரீசாந்த். ஸ்ரீசாந்த் சிறப்பாக ஆட்டம் ஆடுவார் என்று அனைவர்க்கும் தெரியும், இதனால் தன் முதல் படத்தில் நடிக்கவுள்ளார். அவர் நடித்த ‘டீம் 5’ படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
ஒருவேளை உங்களுக்கு தெரியவில்லை என்றால்…
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்தின் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்த ஆண்டு தொடக்கத்தில், 34 வயதான ஸ்ரீசாந்த் கேரள உயர்நீதி மன்றத்திற்கு சென்ற பின்னர், அவரை 2013 ல் அவரது மீது விதிக்கப்பட்ட ஆயுள் தடையை நீக்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஸ்காட்லாந்தில் கிளப் கிரிக்கெட்டில் விளையாட ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் வாரியதுடன் அனுமதி கேட்டார், ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதியை மறுத்துவிட்டது.
செப்டம்பர் 2013-இல் இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் அணியில் விளையாடி கொண்டிருந்த ஸ்ரீசாந்த், ஐபில்-இல் பிக்சிங் செய்ததால் அஜித் சண்டிலா மற்றும் அங்கீத் சவானுடன் கிரிக்கெட்டில் இருந்து வாழ்நாள் தடை பெற்றார். இருப்பினும், இது குற்றம் என்பதால ஸ்ரீசாந்த் மேல் இருந்த தடையை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுக்கவில்லை.
ஸ்ரீசாந்த் படத்தில் ட்ரைலர்:
2007 டி20 உலக கோப்பையில் இருந்து ஸ்ரீசாந்த் பந்து வீச்சில் கலக்கினார். இந்திய அணி வெற்றி பெற்ற 2007-டி20 உலக கோப்பை மற்றும் 2011 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 27 டெஸ்ட் மற்றும் 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரீசாந்த் 87 டெஸ்ட் விக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டும் எடுத்துள்ளார்.