இலங்கை தொடர் முடிந்து விராட் கோலியின் திருமணமும் முடிந்து இந்திய அணி தென்னாப்பிரிக்க சென்றும் விட்டது. இது ஒரு மிகப்பெரிய தொடர் . 3 டெஸ்ட் 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் என இரண்டு மாத காலம் நடக்கவுள்ளது. ஜனவரி 5ஆம் தேதி துவங்கவுள்ள இந்த தொடருக்கு முன்னாள், இந்திய அணி பயிற்சி செய்து வருகிறது.
கடந்த முறை சென்ற அணியைப் போல இல்லாமல் விராட் கோலி தலைமையிலான இந்த அணி தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை முதன் முதலாக வென்று சாதனை படைக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என பல முன்னாள் ஜாம்பன்கள் கூறிவருக்கிறார்கள். அதேபோல் இந்த தொடரில் இந்திய அணியை முன்னின்று வழிநடத்தி வெற்றி பெற வைக்க போகிறவர் விராட் கோலி தான் என முன்னாள் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் கூறியுள்ளார். அவர் தான் இந்திய அணிக்கு துருப்பு சீட்டு, அவர் அதிக ரன் அடித்து இந்திய அணியை முன்னின்று நடந்து வெற்றி பெற வைப்பார் எனவும் கூறியுள்ளார் சேவாக்.
இது குறித்து இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில் சேவாக் கூறியதாவது,
இந்திய அணிக்கு 2018ஆம் வருடம் ஒரு பெரிய சவாலுடன் துவங்குகிறது. தென்னாப்பிரிக்க தொடர் இந்திய அணிக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் மிகப்பெரிய சவாலாக அமையும். இந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றால் அங்கு வெற்றி பெறும் முதல் கேப்டன் ஆவார் விராட் கோலி.

ஒரு கேப்டனாக தென்னாப்பிரிக்க மண்ணில் சரியான ஒரு திட்டம் இருக்க வேண்டும். எப்படி பேட்ஸ்மேசனை வீழ்த்துவது, எப்படி வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிப்பது. இவையெல்லாம் அதை மண்ணில் மிக முக்கியமாவைகள் ஆகும்.

அது போன்ற திட்டங்களை இந்த அணி எளிதில் செயல்ப்படுத்தும் என நினைக்கிறேன். அணியில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கென இரு பொறுப்பு உள்ளதை நினைத்து ஆடக் கூடியவர்கள். பந்து வீச்சாளார்கள் சரியாக திட்டத்தை செல்படுத்தினால் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும்.
தென்னாப்பிரிக்காவில் பேட்ஸ்மேன் பார்ம் மிகவும் முக்கியம். முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் ரன்னை நாம் அடித்துவிட்டால் போதும் இந்திய அணி வெற்றிகை நோக்கி செல்க ஆரம்பித்தது விடும். அதற்கு தான் இந்திய கேப்டன் விராட் கோலி உள்ளார். அவர் தான் பேட்டிங் தூண் ஆவர் அடித்து பெற செய்வார்.