கரோனா வைரஸ் காரணமாக வித்யாசமாக திருமணத்தை நிருத்தி வைத்த கிரிக்கெட் வீராங்கணை! 1

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தோழியுடனான திருமணத்தை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீராங்கனை ஒத்திவைத்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 55,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனாவால் தென் ஆப்பிரிக்காவில் 1400 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 5 பேர் உயிரிழந்துள்ளார்கள். தற்போது தென் ஆப்பிரிக்காவிலும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீராங்கனை லிஸல் லீ, தோழியுடனான திருமணத்தை ஒத்திவைத்துள்ளார். ஏப்ரல் 10 அன்று லிஸல் லீக்கும் நான்கு வருடங்களாகக் காதலித்து வரும் அவருடைய தோழி தன்ஜா குரோனியேவுக்கும் இடையே திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

28 வயது லிஸல் லீ, தென் ஆப்பிரிக்க அணிக்காக ஒரு டெஸ்ட், 82 ஒருநாள், 74 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.கரோனா வைரஸ் காரணமாக வித்யாசமாக திருமணத்தை நிருத்தி வைத்த கிரிக்கெட் வீராங்கணை! 2

தென் ஆப்பிரிக்காவில் ஓரினத் திருமணம் 2006-ல் அங்கீகரிக்கப்பட்டது. தன்ஜா குரோனியேவுடனான காதல் குறித்து ஒரு பேட்டியில் லிஸல் லீ கூறியதாவது: எங்களுக்கு இந்த உறவு சாதாரணம். ஆனால் வெளியே செல்லும்போது கைகளைக் கோத்துக்கொண்டு செல்லமாட்டோம். மக்கள் எங்களைப் பற்றி ஏதாவது நினைப்பார்கள். எங்கள் காதல் குறித்து பெற்றோர்களிடம் சொல்வது கடினமாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கி இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் நோய்க்கிருமி பரவும் வேகத்தை முழுமையாக கட்டுப் படுத்த முடியவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனா வைரஸ் காரணமாக வித்யாசமாக திருமணத்தை நிருத்தி வைத்த கிரிக்கெட் வீராங்கணை! 3
இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,374 ஆக உயர்ந்துள்ளது.   அதேபோல், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75-ல் இருந்து 77 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 213-ல் இருந்து 267 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 490 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 485-பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *