டெண்டுல்கரின் சகாப்தன் துவங்கிய நாள் இது!! 28 வருட சாதனை

சச்சின் டெண்டுல்கர் என்ற சாகப்தம் துவங்கிய நாள் இது தான். தனது முதல் போட்டியை இன்று தான் 28 வருடடங்களுக்கு முன்னர் ஆடினார் சச்சின் டெண்டுல்கர். அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் இப்போது அவரை இந்திய கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட்டில் அவரது தாக்கம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
டெஸ்ட்  போட்டிகளில் யாரவது ஒரு வீரர் திடீரென ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் ஆடினால் கூட, இது சச்சின் டெண்டுல்கரின் அளவிற்கு இல்லை என்பது தான் முதல் கருத்தாக இருக்கும். அந்த அள்விற்கு அவரது தாக்கம் இன்னும் உலக கிரிக்கெட்டில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அந்த இடத்திற்கு வந்த கதை தெரியுமா? கீழே அனைத்து இருக்கிறது.
இந்தியா மட்டுமல்லாது உலகின் அனைத்து நாடுகளில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம்பிடித்த கிரிக்கெட் ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கர். இவர், இந்தியாவின் மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் 1973-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாட தொடங்கினார். அதன் பயனாக 16 வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து சாதனை படைத்தார்.
1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 15-ம் தேதி தொடங்கிய முதல் போட்டி கராச்சியில் நடைபெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 409 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த சமயத்தில் தான், 16 வயது இளைஞரான சச்சின், இந்திய அணிக்காக தனது இன்னிங்ஸை விளையாட களமிறங்குகினார். முதல் போட்டியில் 24 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இளைஞன் பின்னாளில் கிரிகெட்டில் இவ்வளவு பெரிய சாதனை படைப்பார் என்று அப்போது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த இளைஞன் தான் இன்று இந்திய இளைஞர்களின் கிரிக்கெட் கடவுளாக திகழும் சச்சின் டெண்டுல்கர்.

வலது கை ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்கள் எடுத்துள்ளார். 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18,466 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட் வராலாற்றில் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 100 சதம் அடித்த ஒரே வீரர், சச்சின்தான். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30,000 ரனகள் குவித்த வீரர் என்ற பெருமையும் சச்சினையே சேரும். ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்த விரர், சச்சின்.

இந்திய அரசின் அர்ஜுனா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ, பத்மவிபூசண் விருதுகளை பெற்றுள்ளார். மராட்டிய மாநில அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதும் பெற்றுள்ளார். இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற ஒரே விளையாட்டு வீரர் சச்சின்தான். இந்த சாதனைகளை படைத்த சச்சின், 2013-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

Editor:

This website uses cookies.