தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்கு சாலை அமைக்க ரூ. 21.70 லட்சம் நிதியுதவியை முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார்.
மாநிலங்கள் அவை எம்பி பதவி கடந்த ஏப்ரல்மாதத்துக்குள் முடியும் முன் இந்த நிதியுதவியை பெரும்பரலூர் மாவட்டத்தில் உள்ள எழும்பலூர் கிராமத்தில் 500 மீட்டருக்கு சாலை அமைக்க சச்சின் ஒதுக்கியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஊரகப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்(எம்பிஎல்ஏடிஎஸ்) மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் யார் வேண்டுமானாலும், நாட்டின் எந்தப்பகுதி கிராமத்துக்கும் நகரத்துக்கும் நிதி உதவி வழங்கலாம். அந்த அடிப்படையில் சச்சின் டெண்டுல்கர் பெரும்பலூர் மாவட்ட கிராமத்துக்கு வழங்கியுள்ளார்.
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வி.சாந்தா நிருபர்களிடம் கூறுகையில், பெரும்பலூர் மாவட்டச் சேர்ந்தவர் பி. ராதாகிருஷ்ணன். இவர் தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் நாஸிக் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்த ராதாகிருஷ்ணன் பெரம்பலூர் மாவட்டம், எலம்பலூர் கிராமத்துக்கு சாலை அமைக்க நிதியுதவி செய்யக்கோரி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சச்சின் டெண்டுல்கர், தனதுபதவிக்காலம் முடியும் சாலை அமைப்பதற்கான செலவு, திட்டத்தை உடனே அனுப்பக்கோரினார். இதற்காக உடனடியாக திட்டமதிப்பீடு செய்யப்பட்டு, ரூ.22 லட்சம் கோரப்பட்டது.
தனது பதவிக்காலம் முடிவும் முன், எலம்பலூர் கிராமத்துக்கு சாலை அமைக்க சச்சின் ரூ.21.70 லட்சம் நிதி ஒதுக்கினார். இப்போது, மாவட்ட நிர்வாகத்துக்கு சச்சினின் எம்.பி நிதியில் இருந்து பணம் பெறப்பட்டுள்ளது.
சாலை அமைக்கும்பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது அடுத்த 75 நாட்களுக்குள் சாலை முற்றிலுமாக அமைக்கப்பட்டுவிடும். எலம்பலூர் கிராமத்தில் 500 மீட்டர் தொலைவுக்கும், 3.75 மீட்டர் அகலத்திலும், 20 செ.மீ உயரத்திலும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தச் சாலை கட்டமாகத் தரமாக அமைக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட கிராம மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் டி. சிறீதர் கூறுகையில், எலம்பலூர் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. அடுத்த 15 நாட்களுக்குள் முதல்கட்ட சாலை அமைக்கும் பணிகள் முடிந்துவிடும் எனத் தெரிவித்தார்.