ஊரடங்கு காலத்தில்தான் என் தாயாருடன் நிறைய நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 47 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியுள்ள சச்சின், பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர். அவரின் சாதனைகள் இப்போது வரை முறிக்கப்படாமல்தான் இருக்கிறது.
2013 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டும் சச்சினின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இப்படி ஒரு பக்கம் இருக்கையில் மற்றொரு பக்கம் தோனி ரசிகர்கள், கங்குலி ரசிகர்கள் மற்றும் சச்சின் ரசிகர்களுக்கிடையே சமூகவலைதளத்தில் பெரும் பிரச்சனையை சென்றுகொண்டிருக்கிறது. இதில் மூவரில் யார் மிகச்சிறந்த வீரர் என கருத்து மோதல்கள் நடைபெற்று வருகிறது. ஆரோக்கியமான கருத்து மோதல்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் கேலியும் கிண்டலுமாக சக புரிந்துணர்வுடன் மாற்றி மாற்றி சிலாகிப்புடன் கலாய்த்துக்கொள்கின்றனர். அதன் சில துணுக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.