ட்விட்டரில் பதிவிடப்பட்டிருந்த 2 வயது சிறுவனின் கிரிக்கெட் ஆட்டத்தைக் கண்ட சச்சின் டெண்டுல்கர் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்துளார். .
ட்விட்டரில் மோஷின் என்ற நபர் தனது உடன்பிறந்தவரின் 2 வயது மகன் ஆஷிம், கிரிக்கெட் ஆடும் விளையாட்டை பதிவிட்டுருந்தார், அவர் நன்றாக விளையாடுகிறாரா? என்று கோலி, சச்சின், தோனி ஆகியோரை குறிப்பிட்டுகேட்டிருந்தார்
இதற்கு பதிலளித்த சச்சின் அந்த வீடியோவை குறிப்பிட்டு, “நவீன காலத்தின் சிறந்த விளையாட்டு வீரர். சிறந்த தொடக்கம் ஆஷிம். தொடர்ந்து விளையாடுங்கள்..சந்தோஷமாக விளையாடுங்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள் எப்போதும் இருக்கு” என்று பதிவிட்டுள்ளார்.
ட்விட்டரில் இந்த சிறுவனின் கிரிக்கெட் விளையாட்டை பார்த்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Straight drives, lofted shots, flicks. A perfect modern day player! Great start, #Hashim. Keep playing and keep enjoying the sport. My best wishes to you always. #SportPlayingIndia https://t.co/H7QaV8wjSp
— Sachin Tendulkar (@sachin_rt) June 30, 2018
முன்னதாக,
தான் ஆடிய காலக்கட்டத்தை விட தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாகவும் முழுமை பெற்றதாகவும் இருப்பதாக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்திய அணி, பவுலிங்கை விட பேட்டிங்கில்தான் சிறந்த அணியாக திகழ்ந்துள்ளது.
பவுலிங்கை காட்டிலும் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி, அதன்மூலம் வெற்றிகளை பெற்ற அணியாகத்தான் இருந்துள்ளது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை போல, பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சம பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்ததில்லை. எப்போதுமே பவுலிங்கைவிட பேட்டிங்கில் தான் வலுவாக இருந்துள்ளது.

இந்திய அணிக்கு நிரந்தரமான பேட்ஸ்மேன்கள் கிடைத்தார்களே தவிர, நிரந்தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைத்ததில்லை. ஸ்ரீநாத்துடன் இணைந்து ஜாகீர் கான், நெஹ்ரா ஆகியோர் வீசினர். ஸ்ரீநாத், அகார்கர் ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு, பல பவுலர்கள் வந்து சென்றனர். ஸ்ரீசாந்த், இஷாந்த் சர்மா, ஆர்.பி.சிங், முனாஃப் படேல், மோஹித் சர்மா, விஆர்வி சிங், பிரவீன் குமார், வினய் குமார், முகமது ஷமி என பலர் வந்து வந்து சென்றனரே தவிர நிரந்தரமான வேகப்பந்து கூட்டணி அமையவில்லை
ஸ்ரீசாந்த், இஷாந்த் சர்மா, ஆர்.பி.சிங், முனாஃப் படேல், மோஹித் சர்மா, விஆர்வி சிங், பிரவீன் குமார், வினய் குமார், முகமது ஷமி என பலர் வந்து வந்து சென்றனரே தவிர நிரந்தரமான வேகப்பந்து கூட்டணி அமையவில்லை. புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் அணிக்கு வந்த பிறகே நீண்டகால குறை தீர்ந்தது.
இவர்களுடன் இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரும் உள்ளனர். புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்கள். முதல் ஓவர்கள், கடைசி ஓவர்கள் இரண்டையுமே அசத்தலாக வீசக்கூடியவர்கள். புவனேஷ்வர் குமார் – பும்ரா வேகப்பந்து கூட்டணி இந்திய அணிக்கு கிடைத்த பிறகு தான், இந்திய அணி பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் சிறந்த அணியாக திகழ்கிறது. இவர்களுடன் ஹர்திக் பாண்டியாவும் வேகப்பந்து வீசுகிறார். புவனேஷ்வர் குமார் – பும்ராவுக்கு அடுத்து மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக அவரும் விளங்குகிறார்.