அந்த செய்தியை பதிவிட்டது என் மகள் இல்லை, அது போலி கணக்கு!!

 

எனது வாரிசுகள் அர்ஜுன் மற்றும் சாரா பெயரில் செயல்படும் போலி டிவிட்டர் கணக்குகளை உடனடியாக நீக்குங்கள் என்று பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டருக்கு, சச்சின் டெண்டுல்கர் மீண்டும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கடவுள் என்று போற்றப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவருக்கு அர்ஜூன் என்ற மகனும், சாரா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரிலும் டுவிட்டர் அக்கவுண்ட் உள்ளது. இதில் இருந்து சச்சின் தெண்டுல்கரின் மகன் மற்றும் மகள் டுவிட் செய்வதுபோல் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் சமூக வலைத்தளமான டிவிட்டரில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். இவரது வாரிசுகள் அர்ஜுன் மற்றும் சாரா. இதில் அர்ஜுன் அவரது தந்தையைப் போன்றே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி, தற்பொழுது வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து வருகிறார். மகள் சாரா நடிப்பில் ஆர்வம் காட்டி, அதற்கென பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 2014-ஆம் ஆண்டின் மத்தியிலேயே அர்ஜுன் மற்றும் சாரா இருவரது பெயரிலும் பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரில் கணக்குகள் துவங்கப்பட்டு, ட்வீட்டுகள் வெளிவந்தன. ஆனால் சச்சின் உடனடியாக அவற்றை மறுத்ததோடு, அவை போலி கணக்குகள் என்றும், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் டிவிட்டருக்கு வேண்டுகோள் வைத்தார். ஆனால் அவை அப்பொழுது நீக்கப்படவில்லை.

இந்நிலையில் சச்சின் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில் அவர், ‘எனது வாரிசுகள் அர்ஜுன் மற்றும் சாரா டிவிட்டரில் இல்லை என்பதனை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்று டிவிட்டருக்கு நாங்கள் மீண்டும் வேண்டுகோள் வீடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக மற்றொரு ட்வீட்டில், ‘இத்தகைய போலி கணக்குகளால் பெரும் பாதிப்பு உண்டாகிறது. நிறைய தவறான புரிதல்கள் உண்டாகிறது. இதன் விளைவுகள் எங்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது’ என்று பதிவிட்டு தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து 24 ஆண்டுகளாக விளையாடியவர், அதுவரை கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்தார். டெஸ்ட் போட்டியில் 13 முறை, ஒருநாள் போட்டியில் 60 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றார். 4 முறை டெஸ்ட் போட்டிகளிலும் 14 முறை ஒருநாள் போட்டிகளிலும் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலகக் கோப்பை (1996) போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமைக்குரியவர். சென்னை சேப்பாக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதுகுவலியுடன் ஆடி 136 ரன்களைக் குவித்தார்.

463 ஒருநாள் போட்டிகளில் 44.83 என்ற மிகச்சிறந்த சராசரியுடன் 18,426 ரன்களை குவித்துள்ளார் ரன் மெஷின், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.

அதிக போட்டிகள் : 463

அதிக ஆட்ட நாயகன் விருதுகள் : 62

ஒருநாள் தொடர் நாயகன் விருதுகள் : 15

அதிக நாள் கிரிக்கெட்டில் இருந்தது : 22 ஆண்டுகள் 91 நாட்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்களுக்கும் மேல், 154 விக்கெட்டுகள், 140 கேட்ச்கள் என்று அரிய டிரிபிள் சாதனை சச்சினுக்கேயிரியது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் : 18,426 ரன்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்: 49

ஒரே அணிக்கு எதிராக அதிக சதங்கள் : ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 9 சதங்கள்!

இரண்டு அணிகளுக்கு எதிரகா அதிக ஒருநாள் சதங்கள்: ஆஸி.க்கு எதிராக 9, இலங்கைக்கு எதிராக 8;.

NAGPUR, INDIA – MARCH 12: Sachin Tendulkar of India raises his bat on scoring his century during the Group B ICC World Cup Cricket match between India and South Africa at Vidarbha Cricket Association Ground on March 12, 2011 in Nagpur, India. (Photo by Daniel Berehulak/Getty Images)

50க்கும் மேலான ரன்கள் அதிக முறை: 145; 49 சதங்கள், 96 அரை சதங்கள்.

ஒரே ஆண்டில் அதிக ஒருநாள் போட்டி ரன்கள்: 1894 ரன்கள் (சராசரி 65.31), 34 போட்டிகள் இது நடந்தது 1998ஆம் ஆண்டு.

ஒரே ஆண்டில் 1000 ரன்கள் : சாதனையான 7 முறை.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக 90-கள் – 18 முறை; இது சதமாகியிருந்தால் இன்று சச்சின் சாதனைப் பட்டியல் மேலும் உக்கிரமாகக் காட்சியளிக்கும்.

அதிக பவுண்டரிகள் – 2016 பவுண்டரிகள்

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள்: 3077 ரன்கள், 71 போட்டிகள், சராசரி 44.59.

இலங்கைக்கு எதிராக அதிகபட்ச ரன்கள் : 3113, (43.84 சராசரி) – 57 போட்டிகள்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதங்கள்: 5

பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் : 2,556.

பாகிஸ்தானுக்கு எதிராக அதிக சதங்கள்- 5 (லாராவுடன் பகிருந்து கொள்ளும் ஒரே சாதனை)

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி 200 ரன்களை குவித்து சாதனை படைத்தார் சச்சின்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள்: 2,278 சராசரி 56.95, 45 போட்டிகள்.

உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதம் – 6 (44 இன்னிங்ஸ்)

ஒரே உலகக் கோப்பையில் அதிகபட்ச ரன்கள்: 673 ரன்கள் 2003 உலகக் கோப்பை, சராசரி 61.18 – 11 ஆட்டங்கள்.

இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தம் 500 ரன்களுக்கும் அதிகமாக ஸ்கோர் செய்த ஒரே பேட்ஸ்மென் 2003-இல் 673 ரன்கள் 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 523 சராசரி 87.16.

Editor:

This website uses cookies.