மீண்டும் களத்தில் கடவுள்! பயிற்சியாளராகும் சச்சின்..! ரசிகர்கள் ஜாலி! 1
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிக்கு சச்சின் தெண்டுல்கர் பயிற்சி அளிக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டும் நோக்கில் வருகிற பிப்ரவரி 8ந்தேதி சனிக்கிழமை அன்று புஷ்பயர் பேஷ் என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள தீயணைப்பு வீரர்கள், மீட்பு மற்றும் நிவாரண பணியாளர்கள், தன்னார்வலர்கள், அவசரகால பணியாளர்கள் ஆகியோரை அங்கீகரிக்கும் வகையில் போட்டி நடத்தப்படும்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ஷேன் வார்னே மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் மோதுகின்றன.

மீண்டும் களத்தில் கடவுள்! பயிற்சியாளராகும் சச்சின்..! ரசிகர்கள் ஜாலி! 2
In Federal Court papers filed this month and reviewed by Reuters, Tendulkar said Sydney-based Spartan Sports International agreed in 2016 to pay him at least $1 million a year to use his image, logo and promotional services to sell “Sachin by Spartan” sporting goods and clothing.

இந்த அணிகளுக்கு பயிற்சியாளர்களாக முறையே கோர்ட்னி வால்ஷ் மற்றும் சச்சின் தெண்டுல்கர் செயல்படுகின்றனர். இந்த போட்டியில் கிடைக்கும் வருவாய் மற்றும் நிதிகள் அனைத்தும் ஆஸ்திரேலிய செஞ்சிலுவை பேரிடர் நிவாரண மற்றும் மீட்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த போட்டியில் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஆடம் கில்கிறிஸ்ட், பிரெட் லீ, ஜஸ்டின் லேங்கர், மைக்கேல் கிளார்க், ஷேன் வாட்சன் மற்றும் அலெக்ஸ் பிளாக்வெல் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு அமைப்புகள் ஆஸ்திரேலியா மீண்டு வர கடுமையாக போராடி வருகின்றன. காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி திரட்டுவதற்காகப் பிரபல கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் கண்காட்சி கிரிக்கெட் ஆட்டம் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறுகிறது. புஷ்ஃபயர் கிரிக்கெட் பேஷ் என்கிற பெயரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் பாண்டிங், வார்னர், ஜஸ்டின் லாங்கர், ஆடம் கில்கிறிஸ்ட், பிரெட் லீ, ஷேன் வாட்சன், அலெக்ஸ் பிளாக்வெல், மைக்கேல் கிளார்க் போன்றோர் பங்கேற்கிறார்கள்.

Image result for shane warne

இந்நிலையில் ரிக்கி பாண்டிங் அணிக்கு சச்சின் டெண்டுல்கரும், ஷேன் வார்னே அணிக்கு கோர்ட்னி வால்ஷும் பயிற்சியாளர்களாகச் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கெவின் ராபர்ட்ஸ் வெளியிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *