தன்னுடைய மொத்த சம்பளத்தையும் பிரதமர் நிவாரண நிதிக்கு சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார்.
சச்சினின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அவருக்கு சம்பளம் மற்றும் இதர உதவித்தொகைகள் சேர்த்து சுமார் 90 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்த மொத்த பணத்தையும், ஏழைகளுக்குப் பயன்படும் வகையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு தானமாக சச்சின் வழங்கியுள்ளார்.
சச்சின் நாடாளுமன்றத்தில் மிகவும் குறைவான வருகைப் பதிவேடு வைத்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்து வந்தது. ஆனால், சச்சின் தனக்கு வழக்கப்பட்ட நிதியை பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

சச்சினுக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி நிதியாக 30 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அதில், கல்வி தொடர்பான சுமார் 185 நலத்திட்டங்களுக்கு 7.4 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். 20 பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தினார்.
மேலும் தனக்கு அளிக்கப்பட்ட நிதியைக் கொண்டு மகாராஷ்டிராவில் உள்ள டோன்ஜா மற்றும் ஆந்திராவில் உள்ள புட்டம் ராஜு கந்திரிகா ஆகிய இரண்டு கிராமங்களை சச்சின் தத்தெடுத்திருந்தார். சச்சின் செயல்பாடுகளுக்கு பிரதமர் அலுவலகமும் நன்றி தெரிவித்துள்ளது.

மாநிலங்களை எம்.பியாக 6 ஆண்டுகள் பதவிக்காலத்தை சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் நிறைவு செய்தார். கடந்த 6 ஆண்டுகளில் ஊதியம் மற்றும் மற்ற சலுகைகள் என ரூ.90 லட்சம் சச்சினுக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், அந்த தொகை முழுவதையும், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடையாகச் சச்சின் டெண்டுல்கர் அளித்துள்ளார். அவருடைய இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், உதவி தேவைப்படுவோருக்கு அளிக்க இந்த நிதி உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

One of the most notable issues which critics raised was Sachin’s absence from Rajya Sabha.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகை ரேகா ஆகியோர் மாநிலங்களவை விவாதங்களில் முறையாகக் கலந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சச்சின் டெண்டுல்கரின் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களுக்குக் கட்டடம் கட்டுதல் உள்ளிட்ட 185 நலத்திட்டங்களுக்காக சச்சின், ரூ.7.4 கோடி ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. எம்.பி வளர்ச்சி நிதியாக ரூ.30 கோடி அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.