பல ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு உதவிய சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்! சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக தமிழில் ட்வீட்! 1

சச்சின் டெண்டுல்கர் பொதுவாக வெளிப்படையாக தன்னுடைய பேட்டிங் உத்தி உள்ளிட்டவற்றை விவாதிக்க மாட்டார், சுனில் கவாஸ்கர், அச்ரேக்கர், அணியின் அனுபவ வீரர்களான ராகுல் திராவிட், லஷ்மண் போன்றவர்களிடம்தான் விவாதிப்பார்.

ஆனால் அப்படிப்பட்ட சச்சின் டெண்டுல்கருக்கே சென்னை தாஜ்கொரமாண்டல் விடுதி ஊழியர் ஒருவர் சச்சினின் முழங்கை கார்டு மாற்றவேண்டியது பற்றி ஆலோசனை வழங்கியுள்ளார், சச்சின் அவர் ஆலோசனையை ஏற்று முழங்கை கார்டை மாற்றி வடிவமைத்தது குறித்து ஏற்கெனவே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு உதவிய சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்! சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக தமிழில் ட்வீட்! 2
In Federal Court papers filed this month and reviewed by Reuters, Tendulkar said Sydney-based Spartan Sports International agreed in 2016 to pay him at least $1 million a year to use his image, logo and promotional services to sell “Sachin by Spartan” sporting goods and clothing.

சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள் என்று மக்களிடம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர் சென்னையில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது இவருடைய எல்போ கார்ட் தொடர்பாக ஹோட்டல் ஊழியர் ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளார். அதன்பின்பு சச்சின் டெண்டுல்கர் அதனை மாற்றி அமைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் – பிராவோ நம்பிக்கை
இந்தச் சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார். அத்துடன் தனது பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில், “எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு உதவிய சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்! சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக தமிழில் ட்வீட்! 3அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்

 

இதனையடுத்து எவ்வளவு பெரிய நட்சத்திர வீரர், தன் வாழ்க்கையில் சந்தித்த சிறு சிறு விஷயங்கள் மற்றும் மனிதர்களைக் கூட நினைவு வைத்துக் கொண்டுள்ளார் என்று நெட்டிசன்கள் அவரைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *