சமீபத்தில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவங்களில் ஒன்று தான் சச்சின் டெண்டுல்கரின் பாராளுமன்ற வருகை பதிவு மிக குறைவு என ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
ஆனால் தற்போது சச்சின் டெண்டுல்கர் பாராளுமன்ற அமர்வுக்கு வருகை புரிந்துள்ளார்.அவைக்கு வியாழக்கிழமை வருகை புரிந்து தனது வருகையை பதிவு செய்துள்ளார் அவர்.
சில நாட்களுக்கு முன்பு தான் அவையின் உறுப்பினர் ஒருவர் சச்சின் டெண்டுல்கரின் வருகையை பற்றி கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக அந்த உறுப்பினருக்கு பதிலடி கொடுத்தது போல் உள்ளது அவரது இந்த வருகை.
முன்னர் கேள்வி நேரத்தில் சச்சின் டெண்டுல்கரின் மேலவை வருகை மிக மிக குறைவாக உள்ளது, மக்களின் நலத்திட்டங்களை பாராளுமன்றத்தில் கேட்டு பெற முதலில் அவைக்கு வருகை தர வேண்டும், அவைக்கு சரியாக வருகையை வைக்க முடியாத அவர் எவ்வாறு நலத்திட்ட உதவிகளை மக்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார் என்று கேள்வி எழுப்பினார்.
அவர் கூறியதை போலவே கடைசியாக நடந்த 25 மேலவை அமர்வுகளில் வெறும் 2 அமர்வுக்கு மட்டுமே அவர் வருகை புரிந்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரான சச்சின் டெண்டுல்கர், கடந்த 2012 ஆம் ஆண்டு பாராளுமன்ற மேலவை உறுப்பினராக பதிவு ஏற்றுக் கொண்டார். அதில் இருந்து 6 ஆண்டுகளுக்கு அவர் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றுவார்.
அவரின் வருகை பதிவு மிக குறைவு எனினும், அவையில் ஒரு செயல்படும் உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் இதுவரை 8 கேள்விகளை எழுப்பியுள்ளார் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அதனினும், அவர் தன்னுடைய தொகுதி ஒதுக்கீடு நிதியை தனது தொகுதிக்கு திறம்பட பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரால் வருகை சதவிகிதத்தை தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை.
அவர் ராஜ்யசபாவில் அமர்ந்துள்ளது போன்ற புகைப்படங்கள் வெளியானது. அதை வைத்து சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது மட்டுமல்லாமல் பல சாராரும் அந்த புகைப்படத்தை வைத்து விளையாட்டு துணுக்குகள் மற்றும் கிண்டலாக பல சிறு கதைகளையும் பதிவிட்டு அவரை கலாய்த்தும் வருகின்றனர்.
என்னவாயினும் அவர் இந்திய கிரிக்கெட்டிற்க்கு மிகப்பெரும் தொண்டாட்றியுள்ளார். அவரை விமர்சனம் செய்வது ஆரோக்யமாக இருக்க வேண்டுமே தவிர யார் மனதயும் புண்படுத்தாத வண்ணம் இருத்தல் வேண்டும்.