மகளிர் உலக கோப்பை 2017இல் இந்தியா ஆஸ்திரேலியா மோதிய இறுதி போட்டியில் ஹர்மான்ப்ரீட் கவுர் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் விசாலி கொண்டு இருந்தார். அந்த போட்டியில் இவர் 171 ரன்கள் அடித்து ஆடம் இழக்காமல் இருந்து சாதனை படைத்தார்.
இருப்பினும் இதில் ஆச்சிரியம் என்னவென்றால் அவரது விண்ணப்ப மேற்பார்வையாளர் பதவிக்கு நிராகரிக்கப்பட்டது மற்றும் சச்சின் டெண்டுல்கர் அவர் மேற்கத்திய ரெயில்வே உயர் பதவியை பெற உதவினார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் COA உறுப்பினர்களில் ஒருவரான டயானா எடுல்ஜி கூறியது , ஹர்மன் பிரீட் மிகவும் இளம் வயதில் இருந்து நான் பார்க்கிறேன் பிறகு மும்பைக்கு தனது தளத்தை மாற்றிக்கொள்ள விரும்பினார்.
டயானா எடுல்ஜி கூறியது :
ஹர்மன் பிரீட் ஏற்கனவே வடக்கு ரயில்வேயில் ஒரு இளநிலை வகுப்பில் பணியாற்றி வந்தார், அந்த பதவியை ஹர்மன் பிரீட்க்கு டயானா எடுல்ஜி தான் வழங்கினார்.
“அவர் கூறியது, நான் ஒரு உயர் பதவியைப் பெறுவேன்.ஆனால் அவர் வடக்கு ரயில்வேயில் ஒரு இளநிலை வகுப்பைப் தான் பெற்றார்.நான் ஹர்மன் பிரீட்க்கு ஒரு தலைமை அலுவலக மேற்பார்வையாளர் பதவியை வழங்கினேன், பின்னர் அவரது விண்ணப்பம் டெல்லிக்கு அனுப்பப்பட்டது, ஆனால் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது, என்று டயானா எடுல்ஜி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
பிறகு நான் சச்சின் டெண்டுல்கரை சந்தித்து ஹர்மன் பிரீட்க்கு ஒரு உயர் பதவியை வழங்க கூறினேன்.
“சச்சின் இடம் நான் என் கோரிக்கையை கூறினேன், அவர் தான் நாடாளுமன்ற உறுப்பினர், எனவே ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதி ஹர்மன் பிரீத் கவுர்க்கு உயர் பதவியை வழங்க கூறினேன்”
தற்போது இந்த காலம் முடிந்தது இப்போது ஹர்மான்ப்ரீட் உலக மகளிர் கிரிக்கெட் போட்டியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்குகிறார்.