2016 – 17 ஆண்டுக்கான ஐசிசி ஆண்டு விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். மேலும் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் கோலி பெற்றுள்ளார்.
இது குறித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுகலகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்,
இது ஒரு ஆச்சரியம் அல்ல, இந்த விருதுகளுக்கு எல்லாம் அவரை தகுதியானவர். அவருக்கு வாழ்த்துக்கள் என கூறியிருந்தார் சச்சின் டெண்டுலகர்.
No surprises there at all. You deserved it. Many congratulations, @imVkohli! #ICCAwards @ICC
— Sachin Tendulkar (@sachin_rt) January 18, 2018
செப்டம்பர் 21, 2016 முதல் 2017 இறுதி வரை வீரர்களின் ஆட்டம் கணக்கெடுக்கபப்ட்டது. இதில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,203 ரன்களை (77.80 சராசரி) குவித்துள்ளார். இதில் 8 சதங்கள் அடங்கும். அதே காலகட்டத்தில் ஒரு நாள் போட்டிகளில் 1,818 ரன்களை குவித்துள்ளார் (82.63 சராசரி). இதில் 7 சதங்கள் அடங்கும். டி20 போட்டிகளில் 299 ரன்களை எடுத்துள்ளார். மேலும், இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை எட்டியதும் விராட் கோலி தலைமையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதுகளோடு, ஐசிசி-ன் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு விராட் கோலி கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய கோலி, “ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பையை பெறுவது மிகப்பெரிய விஷயம். மேலும் சிறந்த ஒருநாள் வீரர் என்ற விருதும் பெரிய விஷயமே.
2012ல் சிறந்த ஒருநாள் வீரர் விருதை வென்றேன். ஆனால் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பையை வெல்வது இதுவே முதல்முறை. இது எனக்கு மிகப்பெரிய கவுரவம். உலக கிரிக்கெட்டில் இது பெரிய கவுரவம் என நினைக்கிறேன். அதை இரண்டு இந்தியர்கள் அடுத்தடுத்து பெறுவது இன்னும் விசேஷமானது” என்றார். கடந்த வருடம் இந்த விருதை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி-ன் டெஸ்ட் அணி
டீன் எல்கர், டேவிட் வார்னர், விராட் கோலி (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித், புஜாரா, பென் ஸ்டோக்ஸ், டி காக் (விக்கெட்கீப்பர்), அஸ்வின், ஸ்டார்க், ரபாடா, ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஐசிசி-ன் ஒருநாள் அணி
டேவிட் வார்னர், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), பாப்ர் அசாம், டிவில்லியர்ஸ், டி காக் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், ட்ரெண்ட் போல்ட், ஹசன் அலி, ரஷித் கான், பும்ரா