உத்த்ரகாண்ட் மாநிலத்தில் சச்சின் டெண்டுகருக்கு சொந்தமான் ஒரு சுற்றுலா ஓய்வு வீட்டின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. ஏ.என்.ஐ செய்தியின்படி அந்த கட்டிடம் விதிகளை மீறி ராணுவ தடவாளத்தின் ஒரு பகுதிக்குள் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த சொகுசு பங்களா வீட்டின் ஒரு பகுதியை ராணுவ மைய அதிகாரிகள் இடித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது நண்பர் சஞ்சய் நரங் ஆகிய இருவருக்கும் சொந்தமான சொகுசு பங்களா வீடு ஒன்று உத்திரகாண்ட் மாநிலத்தின் கோடைவஸ்தலமான முசோரி மாவட்டத்தின் லாண்டூர் காண்ட் நகரத்தில் உள்ளது அந்த சொல்லப்படும் சொகுசு பங்களா வீடு.
சச்சின் டெண்டுல்கர் கோடை காலங்களில் இந்த வீட்டில் வந்து தங்கி தனது கோடை காலத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம்.இந்த சொகுசு வீட்டின் பக்கத்தில் உள்ளது உத்திரகாண்ட் ராணுவ தளவாட மையம். சச்சின் டெண்டுல்கரின் நண்பர் சஞ்சய் நரங்.
ராணுவ தளவாட மைத்திற்கு அருகில் உள்ளதால், அவரது நண்பர் சஞ்சய் நரங் டெண்ணிஸ் மைதானம் அமைக்க ராணுவ தளவாட அதிகாரி மற்றும் துறையிடம் அனுமதி வாங்கி இருக்கிறார்.
ஆனால், அவர் அனுமதியை மீறி 50 அடி தூரத்திற்கு மேல் வேறு ஒரு கட்டிடம் கட்டியதாகத் தெரிகிறது. இதன் காரணமாக பல முறை நோட்டிஸ் அனுப்பிய அதிகாரிகள் எதிர்வாதியிடம் இருந்து பதில் வரார்த்தால் நடவடிக்கை எடுத்து அந்த அனுமதி மீறி கட்டப்பட்ட பகுதியை இடித்துள்ளனர்.
சென்ற வருடம் இதே போன்று சச்சின் டெண்டுல்கர் அவரது கோடை காலத்தை மகிழ்ச்சியாக கழிக்க சென்றிருந்த போது பிரச்சனை எழுந்து ராணுவ மைய அதிகாரிகள் கட்டிடத்தை இடிக்க வந்துள்ளனர். அப்போதயை பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் தலையீட்டின் மூலமாக தற்காலிகமாக அந்த பிரச்சனைக்கு முடிவு காணப்பட்டது.
இப்போது பிரச்சனை முற்றவே, நீதிமன்ற தலையீட்டின் மூலம் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பற்றி டேராடூன் ராணுவ தளவாட மைய தலைமை செயல் அதிகாரி ஜகிர் ஹசன் கூறியதாவது,
மேல் நீதி மன்றத்தில் இருந்து எங்களுக்கு 28000 சதுர அடி கொண்ட அந்த கட்டிடத்தை இரண்டு வாரங்களுக்குள் இடிக்க உத்தரவு வந்தது. இடிப்பதற்கு முன் அந்த சொகுசு பங்கலாவில் உள்ள அனைவரையும் வெளியேரும்படியும் அவர்களது பொருட்கள் மற்றும் உடுப்புகளையும் எடுத்து கொள்ளும்படியும் நோட்டீஸ் அனுப்பி விட்டோம். இது 6 வருடமாக நீதி மன்றத்தில் நடந்த தொடர் போராட்டம் ஆகும்.
எனக் கூறினார் அந்த அதிகாரி.
இதனைப்பற்றி, சச்சின் டெண்டுகரின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது,
லாண்டுரின் சொகுசு பங்கலாவில் உள்ள பிரச்சனை தொடர்பாக டெண்டுகர் பாதுகாப்பு துறை ஏற்ப்படு செய்த மீட்டிங்கில் கலந்து கொண்டார். சச்சின் டெண்டுல்கர் எப்போதும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்.
அந்த பிரச்சனை சஞ்சய் நரங்கினால் ஏற்ப்பட்டதாகும். தற்போது அவருக்கும் சச்சினுக்கும் எந்த நிர்வாக் மற்றும் வணிக தொடர்பு இல்லை. அந்த சொல்லப்படக் கூடிய லாண்டூர் நகரின் ராணுவ மையத்தின் இடத்திலிருந்து வரும் எந்த ஒரு வணிக மற்றும் பொருளாதார பலன்களில் சச்சின் டெண்டுல்கருக்கு சம்மந்தம் இல்லை.
எனக் கூறினார் அவரது செய்தி தொடர்பாளர்.