இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது 38-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.
பல்வேறு திரை பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் ஹர்பஜன் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் சச்சின், ஹர்பஜனுக்கு சற்று வித்தியாசமான முறையில் தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.

ஹர்பஜன் சிங்கின் ஆட்டத்தை விட அவரது தமிழ் ட்வீட்டுகள் அனைவரையும் கவர்ந்தது. தனது தமிழ் ரசிகர் ஒருவரின் மூலமே அவர் தமிழில் ட்வீட் செய்து வந்தாலும், அவரது இந்த செயல் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தது.
ஐபிஎல் போட்டியில் மும்பை அணியிலிருந்து சென்னை அணிக்கு மாறிய ஹர்பஜன் அதன் பின்னர் தனது ட்விட்டர் பதிவுகளில் தமிழில் பதிவிட்டு வந்தார். இதனால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஹர்பஜனை தமிழ்ப் புலவர் என்று அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் ஹர்பஜனின் தமிழ் ட்வீட்டை நினைவுபடுத்தும் வகையில், ”
விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, @harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட்” என்று பதிவிட்டிருக்கிறார்.
விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, @harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட்? pic.twitter.com/UYOiCQF4mO
— Sachin Tendulkar (@sachin_rt) July 3, 2018