வீடியோ : இந்த வருடத்தின் செம்ம கேட்ச் பிடித்து சஞ்சு சாம்சன் அசத்தல்

 

நாம் அனைவரும் இங்கு இந்தியா, இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நம் கவனத்தை செலுத்தி வரும் வேளையில் அங்கு தென்னாப்பிரிக்கா A அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய A சார்பில் ஆடிக்கொண்டிருக்கும் சஞ்ஜு சாம்சன் ஜான்டி ரோட்ஸ் போல பறந்து சென்று டைவ் அடித்து ஒரு அற்புதமான கேட்ச் பிடித்து அசத்தி உள்ளார் சாம்சன்

தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியாவுல் உள்ள எல் சி டி வில்லியர்ஸ் மைதானத்தில் மூன்று நாடுகள் தொடர்  நடைபெற்று  வருகிறது. இதில் இந்தியா A மற்றும் தென்னாப்பிரிக்கா A உடனான போட்டியில் இந்திய இளம் வீரர் யுஜவேந்திர சகால் வீசிய பந்தை அடிக்க முற்ப்பட்ட தென்னாப்பிரிக்கா A அணி வீரர் டுவைன் ப்ரிட்டோரியஸ் எட்ஜ செய்து விட அதனை ஷார்ட் கவரில் பீல்டிங் செய்யும் சாம்சன் பின்னோக்கி ஓடிச்சென்று டைவ் அடித்து பறவையை போல் பறந்து பிடிக்கும் கேட்ச் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோ துணுக்கு கீழே உள்ள இணைப்பில் உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நட்சத்திரமான சாம்சன் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அவர் ஃபீல்டிங்கிலும் அசத்துவது இந்திய அணிக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது .

இந்தியாவின்  முதல் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான சஞ்ஜு சாம்சன் நம் பக்கத்து மாநிலமான கேரளாவை சேர்ந்தவர். ஐபிஎல் இல் டெல்லி அணிக்காக விளையாடி வரும் அவர் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர். 

இந்திய முதல் தர போட்டியிலும் முத்திரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர் காலத்தில் இந்திய அணிக்காக விளையாடி இது போன்ற பல கேட்ச்களை பிடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைவார் என நம்புவோம்.

Editor:

This website uses cookies.