முதல்-நிலை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் குமார் சங்ககரா

தற்போது நடந்து கொண்டிருக்கும் இங்கிலிஷ் கவுண்டி தொடர் முடிந்தவுடன் முதல்-நிலை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக மே 22-ஆம் தேதி அறிவித்தார் குமார் சங்ககரா.

39 வயதான குமார் சங்ககரா, கவுண்டி தொடரில் சர்ரே அணிக்காக விளையாடுகிறார். மிடில்செக்ஸ் எதிரான போட்டியின் போது இரண்டு சதங்கள் அடித்து, முதல்-நிலை கிரிக்கெட்டில் 20,000 ரன் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார் முன்னாள் இலங்கை கேப்டன் சங்ககரா.

சாம்பியன்ஷிப் போட்டியில் 2015-க்கு பிறகு இரு சதங்கள் அடித்த முதல் சர்ரே வீரர் என பெருமையை பெற்றார் சங்ககரா. இதற்கு முன்னாள் 2015-இல் சர்ரே அணிக்காக அருண் ஹரிநாத் என்பவர் ஒரே போட்டியில் இரண்டு சதம் கண்டுள்ளார்.

இதுவரை 254 முதல்-நிலை போட்டிகளில் விளையாடியுள்ள குமார் சங்ககரா, 20,012 ரன் (சராசரி 51.18), அத்துடன் 60 சதம் மற்றும் 85 அரைசதம் அடித்துள்ளார். முன்னாள் இலங்கை கேப்டன் சங்ககரா கடைசியாக ஒருமுறை வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் டி20 தொடரில் விளையாடி, தன்னடைய கிரிக்கெட் பயணத்தை முடித்து கொள்வார்.

“4-நாள் போட்டியில் விளையாடுவது இதுதான் கடைசி முறை. இன்னும் சில மாதங்களில் எனக்கு 40 வயது, அதனால் இதுதான் என்னுடைய பயணத்தை முடித்துக்கொள்ள சரியான தருணம்,” என சங்ககரா கூறினார்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் தொடரில், 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 592 ரன்னுடன் 4 சதம் மற்றும் 1 அரைசதம் அடித்துள்ளார்.

தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 134 டெஸ்ட், 404 ஒருநாள் போட்டி, 56 டி20 போட்டிகளுடன் 2015-இல் ஓய்வு பெற்றார். இலங்கைக்காக தன்னுடைய முதல் போட்டியை ஜூலை 5, 2000-இல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 12,400 ரன்னும், ஒருநாள் போட்டியில் 14,234 மற்றும் சர்வதேச டி20 போட்டியில் 1382 ரன்னும் எடுத்து ஓய்வு பெற்றார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.