தென்னாப்பிரிக்க தொடரில் தோற்றால் இந்திய அணிக்கு வரப்போகும் ஆப்பு இதுதான்! 1

ஐசிசி தரவரிசையில் 115 ரேட்டிங்குகளுடன் முதலிடத்தில் உள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. 108 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.

இரு அணிகளும் அக்டோபர் 2 முதல் தொடங்கவுள்ள 3 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளன.

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோற்றால் பெரிய அபாயம் ஒன்று காத்திருக்கிறது.

டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தால் இந்திய அணி தொடர்ந்து ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் தான் இருக்கும். பிரச்னையில்லை.

ஆனால் 0-1 என்கிற அளவில் டெஸ்ட் தொடரில் தோற்றாலும் முதலிடத்தை இழந்துவிடும் இந்திய அணி. அதேபோல 0-2, 0-3 என்றாலும் முதலிடம் இந்திய அணியின் வசம் இருக்காது. பதிலாக, டெஸ்ட் தொடரை வெல்லும் தென் ஆப்பிரிக்க அணி, ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துவிடும். தொடரில் தோற்ற இந்திய அணி 2-ம் இடத்துக்கு இறங்கிவிடும். இப்படியொரு அபாயத்துடன் தான் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.தென்னாப்பிரிக்க தொடரில் தோற்றால் இந்திய அணிக்கு வரப்போகும் ஆப்பு இதுதான்! 2

எனவே முதலிடத்தைத் தக்கவைக்கவேண்டுமென்றால் டெஸ்ட் தொடரை வென்றே ஆகவேண்டும், அல்லது டிராவாவது செய்யவேண்டும் என்கிற நெருக்கடி இந்திய அணிக்குத் தற்போது ஏற்பட்டுள்ளது.

சவாலை வென்று காண்பிப்பாரா விராட் கோலி?

தென் ஆப்பிரிக்கா, போர்டு பிரசிடென்ட் லெவன் அணிகள் மோதும் 3 நாள் கிரிக் கெட் போட்டி இன்று விஜயநகரத்தில் தொடங்கவுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி டி20, 3 நாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து 3 நாள் போட்டி இன்று தொடங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து 3 கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறும்.

ஆந்திர மாநிலம் விஜயநகரத்திலுள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்த 3 நாள் போட்டி நடைபெறவுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கும், போர்டு பிரசிடென்ட் லெவன் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்களும் இது ஒரு நல்ல பயிற்சி ஆட்டமாக அமையும். ரோஹித் சர்மா தலைமையில் போர்டு பிரசி டென்ட் லெவன் அணி களம் காண்கிறது.தென்னாப்பிரிக்க தொடரில் தோற்றால் இந்திய அணிக்கு வரப்போகும் ஆப்பு இதுதான்! 3

குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. டெஸ்ட் போட்டி களில் சமீப காலமாக சிறப்பாக பரிமளிக்காத நிலையில் இந்த போட்டியை அவர் நன்கு பயன் படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் போர்டு பிரசிடென்ட் லெவன் அணியில் மயங்க் அகர்வால், கருண் நாயகர், பிரியங்க் பஞ்சால், ஏ.ஆர்.ஈஸ்வரன், சித்தேஷ் லாட் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். பவுலிங்கில் ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ், அவேஷ் கான் ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணியை அச்சுறுத்துவர் என எதிர்பார்க்கலாம்.

மாறாக சர்வதேச டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது. அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் பாப் டூ பிளெசிஸ் தலைமையில் அணி களம் காண்கிறது. பேட்டிங்கில் டூ பிளெசிஸ், குயின்டன் டி காக், டீன் எல்கர், எய்டன் மார்கிராம் ஆகியோர் இந்தப் போட்டியில் அதிக அளவு ரன் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைப் போலவே பவுலிங்கில் அந்த அணி லுங்கி நிகிடி, வெர்னான் பிலாண்டர், காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்டே ஆகியோர் போர்டு பிரசிடென்ட் லெவன் அணி வீரர்களை அச்சுறுத்தக் காத்திருக்கின்றனர்.தென்னாப்பிரிக்க தொடரில் தோற்றால் இந்திய அணிக்கு வரப்போகும் ஆப்பு இதுதான்! 4

அணி விவரம்:

போர்டு பிரசிடென்ட் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், ஏ.ஆர்.ஈஸ்வரன், கருண் நாயர், சித்தேஷ் லாட், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), ஜலஜ் சக்சேனா, தர்மேந்திரசின் ஜடேஜா, அவேஷ் கான், இஷான் போரல், ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ்.

தென் ஆப்பிரிக்கா: பாப் டூ பிளெசிஸ் (கேப்டன்), டெம்பா பவுமா (துணை கேப்டன்), தெனிஸ் டி புருயின், குயின்டன் டி காக், டீன் எல்கர், ஜுபாயர் ஹம்சா, கேசவ் மகராஜ், எய்டன் மார்கிராம், சேனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ட்டே, வெர்னான் பிலாண்டர், டேட் பயட், காகிசோ ரபாடா, ரூடி செகன்ட். – பிடிஐ

நேரம்: காலை 9.30.

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *