உலக்கக்கோப்பைக்கு தயராகும் ஸ்காட்லாண்ட் அணி… முத்தரப்பு தொடரில் பங்கேற்கிறது !!

Afghanistan's Mohammad Shahzad reacts as Scotland players celebrate during play in the 1st One Day International (ODI) between Scotland and Afghanistan at The Grange in Edinburgh, Scotland on July 4, 2016. / AFP / Andy Buchanan (Photo credit should read ANDY BUCHANAN/AFP/Getty Images)

ஸ்காட்லாண்ட் கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும் துபாய் உடனான முத்தரப்பு தொடரில் பங்கேற்க உள்ளது.

வரும் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பைக்காக இந்திய அணி உள்பட  அனைத்து கிரிக்கெட் அணிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

உலக்ககோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் வரும் மார்ச் மாதம் ஜிம்பாப்வேவில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இதற்கு முன்னதாக ஸ்காட்லாண்ட் கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும் துபாய் அணிகள் உடனான முத்தரப்பு தொடரில் பங்கேற்க உள்ளது.

ஸ்காட்லாண்ட் அணிக்காக 2017ம் ஆண்டு அதிக ரன்கள் அடித்திருந்த கைல் கூட்சர் தலைமையில், ஸ்காட்லாண்ட் அணி இந்த தொடரில் களம் காண உள்ளது.

உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கு முன்னதாக நடைபெற உள்ள இந்த தொடர் நிச்சயம் தங்களை பலப்படுத்தி கொள்ள உதவியாக இருக்கும் என்று ஸ்காட்லாண்ட் அணியின் பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் உலகக்கோப்பை தகுதிச்சுற்றிற்கு முன் தங்களின் பலத்தை உலகிற்கு காட்டுவதற்கு இந்த தொடர் நிச்சயம் உதவி செய்யும் என்றும், இந்த தொடரை கைப்பற்றுவதற்கு நாங்கள் முழுமையாக போராடுவோம். இளம் புதுமுக  வீரர்கள் சிலருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றும் கிராண்ட் தெரிவித்துள்ளார்.

முத்தரப்பு தொடருக்கான ஸ்காட்லாண்ட் அணி;

கைல் கூட்சர்(கேப்டன்), ரிச்சி பெரிங்ஸ்டன், ஸ்காட் கேம்ரோன், மேத்யூ கிராஸ், அலெய்ஸ்டர் ஈவான்ஸ், மைக்கெல் ஜோன்ஸ், மைக்கல் லீஸ்க், கால்கம் மேக்லியோட், ஜார்ஜ் முன்சி, சாஃப்யான் சரீஃப், டாம் சோல், காரிஜ் வால்லன்ஸ், மார்க்ஸ் வாட், ஸ்டூவர்ட் விட்டிங்கம்.

போட்டி அட்டவணை;

16 ஜனவரி 2018 – ஸ்காட்லாண்ட் – அயர்லாந்து

18 ஜனவரி 2018 – ஸ்காட்லாண்ட் – அயர்லாந்து

21 ஜனவரி 2018 – ஸ்காட்லாண்ட் – துபாய்

23 ஜனவரி 2018 – ஸ்காட்லாண்ட் – துபாய்

Mohamed:

This website uses cookies.