இந்தியா இலங்கை இடையேயான கொலும்புவில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று களம் இறங்கிய இலங்கை அணி காலை துவக்கத்திலேயே சொதப்பியது.

Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS
அப்போது, அஸ்வின் வீசிய 47 வது ஓவரின் முதல் பந்தை எதிர் கொண்ட தில்ருவன் பெரேரா அந்த பந்து எங்கே சென்றது என்ன ஆனது எனக்கூட தெரியாத அளவிற்க்கு தலை சுற்றிப் போனார். அந்த பந்து 6வது ஸ்டெம்ப்பில் குத்தி நேராக அவரது லெக் ஸ்டெம்ப்பை பதம் பார்த்தது. அஸ்வின் வீசிய அந்த பந்தை எதிர் கொள்ள முடியாமல் பெவிலியன் திரும்பினார் தில்ருவன் பெரேரா.
அந்த வீடியோ கீழே :
https://twitter.com/84107010ghwj/status/893790296420622336
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது இலங்கை. தொடக்க முதலே விக்கெட்டுகளை சாய்க்க துவங்கிய அஷ்வின் மற்றும் ஜடேஜா இலங்கையின் பேட்ஸ்மேன்களை பங்கம் செய்ய துவங்கினர். மேலும் அஸ்வின் மீண்டும் ஒரு 5 விக்கேட்டை வீழ்திய்தோடு மட்டுமல்லாமல், மற்றொரு சாதனையயையும் புரிந்தார், அதாவது

Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS
கொழும்பு டெஸ்ட் போட்டியில் இந்திய முதல் இன்னிங்சில் அரைசதம் கண்ட அஸ்வின், 2,000 ரன்களை எட்டியதோடு 2000 ரன்கள்-200 விக்கெட்டுகள் என்ற இரட்டையை விரைவில் எட்டிய 4-வது வீரர் என்ற சாதனைக்குரியவரானார்.
புஜாரா இன்று கருணரத்னேயின் பந்தில் எல்.பி.ஆனவுடன் சஹா இறங்க வேண்டியதற்குப் பதில் அஸ்வின் இறங்கினார், ஒன்றுமேயில்லாத இலங்கைப் பந்துவீச்சை அசால்ட்டாக கையாண்ட அஸ்வின் தனது 11-வது அரைசதத்தை சிக்ஸ் அடித்து எட்டினார். ரங்கனா ஹெராத் தூக்கி வீசிய பந்தை மேலேறி வந்து நேராக ஒரு தூக்கு தூக்கினார் பந்து சிக்ஸ், அஸ்வின் அரைசதம்.

Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS
மேலும் 250 விக்கெட்டுகள் 2000 ரன்கள் என்ற இரட்டையை அதிவேகமாகச் சாதித்த வீரருமானார் அஸ்வின். இதன் மூலம் இம்ரான் கான், ரிச்சர்ட் ஹாட்லி, இயன் போத்தம் ஆகிய ஜாம்பவான் ஆல்ரவுண்டர்களை விட குறைந்த போட்டிகளில் 250விக். – 2000 ரன்கள் இரட்டையை எடுத்து சாதித்துள்ளார் அஸ்வின்.
ரிச்சர்ட் ஹாட்லி 54 டெஸ்ட் போட்டிகளில் 250-2000 இரட்டையை சாதிக்க போத்தம் மற்றும் இம்ரான் இதே சாதனையை 55 டெஸ்ட் போட்டிகளில் நிகழ்த்தினர்.
ஆனால் 200 விக்கெட்டுகள்-2000 ரன்கள் இரட்டையை போத்தம் 42 டெஸ்ட் போட்டிகளிலும் கபில் மற்றும் இம்ரான் 50 டெஸ்ட் போட்டிகளிலும் எட்ட, அஸ்வின் 4-வது இடத்தில் உள்ளார்.