அவரை அணியில் நீக்க ஏன் தயங்குகிரீகள்..? சாதனை கேப்டனை சீண்டும் சேவாக்!! 1

தோனியின் தலைமையில் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து முக்கிய பட்டங்களையும் வென்று அசத்தியது. டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியதும் தோனி கேப்டன்ஷிப்பில் தான். 38 வயதான தோனி உலகக் கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. உலகக்கோப்பை போட்டியில் அவரது ஆட்டம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இந்திய அணியில் தோனிக்கு இனி இடம் இல்லை : நெருக்கடி கொடுக்கும் பி.சி.சி.ஐ.. வருத்தத்தில் ரசிகர்கள்

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில், இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த போட்டியில் தோனியின் ரன் அவுட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து தோனி தனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற சர்ச்சை மீண்டும் எழுந்தது.

முன்னாள் வீரர்கள் சிலர் தோனிக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், தோனி அது குறித்து எதுவும் மனம் திறக்கவில்லை. இதற்கிடையே 2020ல் நடக்க இருக்கும் உலகக் கோப்பை டி-20 தொடர் வரை தோனி விளையாட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில், அவருக்கு பி.சி.சி.ஐ தற்போதே நெருக்கடி கொடுக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வலம் வருகின்றன. அதாவது, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவரை ஓய்வுபெறச் செய்வது தான் சரியாக இருக்கும் கருதப்படுகிறது.DUBAI, UNITED ARAB EMIRATES - JANUARY 28: Virender Sehwag of Gemini Arabians looks on during the opening match of the Oxigen Masters Champions League 2016 between Libra Legends and Gemini Arabians at the International Cricket Stadium on January 28, 2016 in Dubai, United Arab Emirates. (Photo by Francois Nel/Getty Images)

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் உள்பட அடுத்தடுத்து வரும் தொடர்களில் அணியில் தோனிக்கான நிரந்தர வாய்ப்பு முறை நீக்கப்பட்டு, சாதாரணமாக வீரர்களுக்கு நடத்தப்படுவது போன்று ஆட்டத்திறன் அடிப்படையிலேயே தோனியும் அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடைசியில் சேவாக், கங்குலிக்கு ஏற்பட்ட நிலை டோனிக்கும் ஏற்பட்டுள்ளது. டோனிக்கு வயதாகி விட்டது. அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். தற்போது சேவாக்கும் தனியார் செய்தி சேனலின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் அதே கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சேவாக் தோனியை சீண்டும் விதமாக பேட்டியளித்துள்ளார்.. 
தோனி குறித்து அவர் பேசியதாவது,…அவரை அணியில் நீக்க ஏன் தயங்குகிரீகள்..? சாதனை கேப்டனை சீண்டும் சேவாக்!! 2
நான் அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டேன். ஆனால் அதில் வெளிப்படை தன்மை இல்லை. என்னை அணியில் இருந்து நீக்கும் போது என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் அதற்கு முன்பெல்லாம் வீரர்களை நீக்கினால் அவர்களிடம் தெரிவிக்கப்படும்.
ஆனால் 2007க்கு பின்பெல்லாம் அப்படி நடக்கவில்லை. வீரர்களை நீக்கும் போது அவர்களிடம் எதுவுமே தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது மட்டும் மூத்த வீரர்களை (தோனியை மறைமுகமாக குறிப்பிடுகிறார்) நீக்க அணி நிர்வாகம் பெரிய அளவில் யோசிக்கிறது. சில வீரர்களை நீக்க அணி நிர்வாகம் யோசிக்கிறது. இந்திய அணியை எதிர்காலத்திற்காக தயார் செய்ய வேண்டும் என்றால் நாம் கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டும். அணியும், தேர்வு கமிட்டியும் ஆலோசனை செய்ய வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் அப்படி நடக்கிறதா? என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *