இந்திய அணியின் மற்ற பயிற்சியாளர்கள் பட்டியல் வெளியீடு!! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 1

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பாங்கருக்குப் பதிலாக முன்னாள் இந்திய தொடக்க வீரர் விக்ரம் ராத்தோர் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் பவுலிங் கோச் பாரத் அருண், பீல்டிங் கோச் ஸ்ரீதர் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். நிர்வாக மேலாளர் சுனில் சுப்ரமணியத்துக்குப் பதிலாக கிரிஷ் டோங்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.

50 வயதாகும் விக்ரம் ராத்தோர் ஆடியதோ 6 டெஸ்ட் போட்டிகள் 7 ஒருநாள் போட்டிகளே ஆடியுள்ளார், உயர்தர பேட்ஸ்மென் என்றெல்லாம் கூற முடியாது, ஆனால் செல்வாக்குள்ளவர். 2016-ல் சந்தீப் பாட்டீல் தேர்வுக்குழு தலைவராக இருந்த போது அணித்தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்தார்.இந்திய அணியின் மற்ற பயிற்சியாளர்கள் பட்டியல் வெளியீடு!! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 2

பரிந்துரைகளின் படி ராத்தோருக்கு முதலிடமும், பாங்கர் 2வது இடமும், இங்கிலாந்தின் மார்க் ராம்பிரகாஷுக்கு 3ம் இடமும் கிடைத்தது, இதனையடுத்து ராத்தோர் தேர்வு செய்யப்பட்டார்.

அதே போல் ஸ்ட்ரெந்த் அண்ட் கண்டிஷனின் ட்ரெய்னராக இங்கிலாந்தின் லூக் உட்ஹவுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுனில் சுப்ரமணியம் மே.இ.தீவுகளுக்கு சென்ற அணியின் மேலாளராக சென்ற சுனில் சுப்ரமணியம் இந்திய அரசின் தூதரர்களிடத்தில் முறைதவறி நடந்து கொண்டதாக புகார் எழுந்ததால் நீக்கப்பட்டார். இவருக்குப் பதிலாக கிரிஷ் டோங்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் மற்ற பயிற்சியாளர்கள் பட்டியல் வெளியீடு!! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 3

எண்

பேட்டிங் பயிற்சியாளர்

பந்துவீச்சு பயிற்சியாளர்

பீல்டிங் பயிற்சியாளர்

1

திரு விக்ரம் ரத்தோர்

திரு பி.அருண்

திரு ஆர்.ஸ்ரீதர்

2

திரு சஞ்சய் பங்கர்

திரு பராஸ் மாம்ப்ரே

திரு அபய் சர்மா

3

திரு மார்க் ராம்பிரகாஷ்

திரு வெங்கடேஷ் பிரசாத்

திரு டி. திலீப்

 

 பிசியோதெரபிஸ்ட் மற்றும் நிர்வாக மேலாளர் பதவிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் கீழே 

எண்

பிஸியோ

நிர்வாக மேலாளர்

1

திரு நிதின் படேல்

திரு கிரிஷ் டோங்ரே

2

திரு ஆண்ட்ரூ லீபஸ்

திரு வெங்கடேஷ் ராஜகோபாலன்

3

திரு வைபவ் தாகா

திரு ஆனந்த் யால்விகி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *