உலககோப்பையில் 4 விக்கெட் வீழ்த்திய டீன் ஏஜ் வீரர்: பாக். வீரர் சாதனை! 1

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 228 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி லீட்ஸில் உள்ள ஹெட்லிங்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கான் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரஹ்மத் ஷா, குல்பதின் நெய்ப் களமிறங்கினர்.

நெய்ப் 15 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹஷ்மத்துல்லா ஷஹிடி முதல் பந்திலே டக் அவுட் ஆனார். இந்த இரண்டு விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்ரிடி சாய்த்தார். 27 ரன்னிற்குள் ஆப்கான் இரண்டு விக்கெட்டை இழந்தது. நபியும் 16 ரன்னில் ஏமாற்றினார்.

ரஹ்மான், முகமது நபி ஆகியோரை மிகவும் கவனமாக ஆடுவது அவசியமாகிறது, அவசரப்பட்டு ஆட்டமிழந்தால் 227 ரன்களை விரட்டுவதில் தங்களைத் தாங்களே சிக்கலுக்குள்ளாக்குவதோடு அரையிறுதி வாய்ப்பும் பறிபோகும்.உலககோப்பையில் 4 விக்கெட் வீழ்த்திய டீன் ஏஜ் வீரர்: பாக். வீரர் சாதனை! 2

ஆப்கானிஸ்தான் முதல் 10 ஒவர்களில் 46/2, பிறகு 11ம் ஓவர் முதல் 40ம் ஓவர் வரை 138/4,  41-50: 43/3 என்ற ரீதியில் ரன்களை எடுத்தது.  மொத்தம் 174 டாட்பால்களை பாகிஸ்தான் வீசியது, மீதமுள்ள பந்துகளில் ஆப்கானிஸ்தான் 21 பவுண்டரிகள் 2 சிக்சர்கள். அதாவது 23 பந்துகளில் 96 ரன்கள். மொத்தம் டாட் பால்கள் நீங்கலாக 126 பந்துகளில் 227 ரன்கள் எடுத்துள்ளது. ஆனால் மளமளவென விக்கெட்டுகளை இழந்ததால் ஸ்கோர் எழும்பவில்லை.

ரஹ்மத் ஷா சில கண்ணுக்குக் குளிர்ச்சியான ஷாட்களை ஆடினார். 5வது ஒவரில் ஷாஹின் அப்ரீடி குல்பதீன் நயீபையும் ஹஸ்மதுல்லா ஷாஹிதியையும் அடுத்தடுத்து வீழ்த்தினார். ரஹ்மத் ஷாவை இமாத் வாசிம் வீழ்த்த ஆப்கான் அணி 12 ஒவர்களில் 57/3 என்று ரன் விகிதத்தில் 5க்குப் பக்கத்தில் இருந்தது. இக்ரம் அலிகில் (24), அஷ்கர் ஆப்கான் இணைந்து 64 ரன்களை எடுத்து நன்றாக ஆடி வந்தனர். ஆனால் அஷ்கர் ஆப்கானுக்கு ஷார்ட் லெக் பீல்டரைக் கொண்டு வந்து நிறுத்த மேலேறி வந்து அடிக்கலாம் என்று இறங்கி பந்தை விட்டார் பவுல்டு ஆனார். ஆனால் அஷ்கர் ஆப்கான் அதிரடியாகக் கலக்கினார். 35 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்கள் என்று அபாயகரமாக திகழ்ந்தார்

உலககோப்பையில் 4 விக்கெட் வீழ்த்திய டீன் ஏஜ் வீரர்: பாக். வீரர் சாதனை! 3

பின்னர் வந்தவர்களில், நஜிபுல்லா ஜத்ரன் மட்டும் 42 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆப்கான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் ஷா அப்ரிதி 4 விக்கெட் சாய்த்தார். இமாத் வாசிம், வாஹப் ரியாஸ் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.

சிறப்பாக விளையாடி வந்த ஷா 35 ரன்னிலும், விக்கெட் கீப்பர் இக்ரம் அலிகில் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய அஸ்கார் ஆப்கன் 35 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அவர் இரண்டு சிக்ஸர், மூன்று பவுண்டரிகள் விளாசினார். இதனையடுத்து, 228 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது.

உலககோப்பையில் 4 விக்கெட் வீழ்த்திய டீன் ஏஜ் வீரர்: பாக். வீரர் சாதனை! 4

ஆண்கள் உலகக் கோப்பை தொடரில் முதல் டீன்-ஏஜ் வீரராக ஷஹீன் 4 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார். கடந்தப் போட்டியில் இவர் 3 விக்கெட் வீழ்த்தியிருந்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் முதன் முறையாக அமீர் விக்கெட் எடுக்கவில்லை.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *